இப்படியும் கூட ஒரு ஏற்றுமதி பொருளா?
ஏற்றுமதி இறக்குமதி பொருட்கள் பலவற்றை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் மிகவும் வினோதமாக ஒரு நாடானது பறவைகளின் கழிவுகளை ஏற்றுமதி செய்கிறது.
By : Karthiga
உலகத்தில் எத்தனையோ வகையான ஏற்றுமதி பொருள்களை நாம் பார்த்திருப்போம். பல்வேறு வகையான ஏற்றுமதி பொருட்களை நாடுகள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும். ஆனால் மிகவும் வினோதமாக பறவையின் எச்சங்களை ஏற்றுமதி செய்கிறது ஒரு குடியரசு நாடு. வயலுக்கு உரமாக பல்வேறு பொருட்களை நாம் பயன்படுத்துவோம்.ஆனால் பறவை எச்சங்கள் வயல்வெளிகளுக்கு மிகச்சிறந்த உரமாக பயன்படுகிறது.
அதிக மகசூலையும் விளைச்சலையும் தருகிறது என்கிற காரணத்தால் நவ்ரு குடியரசு நாடானது தன் நாட்டின் விவசாயத்திற்கு தேவையான பறவைகளின் எச்சங்களுக்குப் போக மிச்சம் இருப்பவற்றை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. நவ்ரு நாட்டில் நிறைய பறவைகள் உண்டு. அந்த பறவைகளின் எச்சங்கள் மிகச் சிறந்த உரமாக செயல்படுகிறது. அதனால் தன் நாட்டிற்கு போக மீதம் இருப்பவற்றை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்த நாடுகளும் பயன்படுத்தி வருகிறது.
SOURCE :DAILY THANTHI