Kathir News
Begin typing your search above and press return to search.

இந்த இரு நாடுகளுக்கிடையே இப்படி ஒரு உச்சகட்ட பதற்றமா?

மீண்டும் போர் பயிற்சியை தொடங்கியதால் பரபரப்பு.தைவான் சீனா இடையே உச்சகட்ட பதற்றம்.

இந்த இரு நாடுகளுக்கிடையே இப்படி ஒரு உச்சகட்ட பதற்றமா?

KarthigaBy : Karthiga

  |  9 Aug 2022 7:00 AM GMT

சீனா தைவானை சுற்றி மீண்டும் போர் பயிற்சியை தொடங்கி இருப்பதால் இரு நாடுகள் இடையிலான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.

சீனாவில் 1927 ஆம் ஆண்டு முதல் 1949 ஆம் ஆண்டு வரை நடந்த உள்நாட்டுப் போருக்குப் பின் தைவான் சீனாவிடம் இருந்து பிரிந்து தனி நாடாக உருவானது. ஆனால் சீனாவோ தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதியே என்று தொடர்ந்து கூறி வருகிறது.

இதனால் உலகின் பிற நாடுகள் தைவானின் சுதந்திரத்தை ஆதரிப்பதை சீனா கடுமையாக எதிர்க்கிறது.ஆனால் அதை மீறி அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா-சீனா இடையே மோதல் போக்கு நீடிக்கும் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி தைவானுக்கு சென்றார் .

இதனால் கடும் கோபமடைந்த சீனா தைவானை நாலாபுறமும் சுற்றிவளைத்து கடல் மற்றும் வான் வெளியில் போர்ப் பயிற்சியை தொடங்கியது.

கடந்த 4 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கிய இந்த பயிற்சி 8-ஆம் தேதி மதியம் 12 மணிவரையில் தொடர்ந்து 4 நாட்களாக சீனா ராணுவம் கடுமையான போர் பயிற்சியில் ஈடுபட்டது சீன ராணுவத்தின் இந்தப் போர்ப் பயிற்சி தங்கள் நாட்டின் மீது படையெடுத்து அதற்கான ஒத்திகை என்று தைவான் குற்றம் சாட்டியது. இந்த நிலையில் சீன ராணுவம் நேற்று தைவானை சுற்றி புதிய போர் பயிற்சி தொடங்கியது. கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள் மீது கடல்வழி தாக்குதல் மற்றும் தொலைதூர வான் தாக்குதல் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய அளவில் இந்தப் போர்ப் பயிற்சி நடத்தப்படுவதாக சீன ராணுவம் கூறியது அதேசமயம் இந்த புதிய போர் பயிற்சி எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பதை சீன ராணுவம் தெரிவிக்கவில்லை.

தைவானை சுற்றி தொடர்ந்து நான்கு நாட்கள் போர் பயிற்சியை நடத்திய பின்னர் சீனா மீண்டும் மிகப் பெரிய போர் பயிற்சியை தொடங்கி இருப்பதால் தைவான்- சீனா இடையிலான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News