Kathir News
Begin typing your search above and press return to search.

எல்லோருக்கும் படி அளக்கும் ஏழுமலையான் கோவிலில் கூட இப்படி ஒரு திருட்டு மோசடியா?

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 35 ஆயிரம் லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த தேவஸ்தான ஊழியர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

எல்லோருக்கும் படி அளக்கும் ஏழுமலையான் கோவிலில் கூட இப்படி ஒரு திருட்டு மோசடியா?

KarthigaBy : Karthiga

  |  20 May 2023 11:00 AM GMT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தரிசனம் முடிந்து கோவிலில் இருந்து வெளியே வந்த பக்தர்கள் லட்டு பிரசாதத்துக்காக அங்குள்ள கவுண்டர்களில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர் .இதை பயன்படுத்தி லட்டுகள் கூடுதல் விலைக்கு வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. லட்டுகள் தயாரிக்கும் இடத்தில் இருந்து தட்டுகளில் விற்பனைக்கு கவுண்டர்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.


இந்த பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் லட்டுக்களை திருடி விற்பனை செய்வதாக தேவஸ்தான பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் வந்தது . அந்த தகவலின் பெயரில் தேவஸ்தான பறக்கும் படை அதிகாரிகள் லட்டுகளை எடுத்துச் செல்லும் பணியை கண்காணித்து வந்தனர். அப்போது தேவஸ்தான ஊழியர்கள் ஐந்து பேர் 15 தட்டுகளில் வைக்கப்பட்டு இருந்தால் 750 லட்டுக்களை திருடி எடுத்துச் சென்றனர்.


அவர்களை பறக்கும்படி அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் விசாரித்த போது இதுவரை 35 ஆயிரம் லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. தேவஸ்தான ஊழியர்கள் ஐந்து பேரும் திருமலை 2-டவுன் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர் . ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News