Kathir News
Begin typing your search above and press return to search.

இஸ்லாமிய பழமைவாதிகள் மிரட்டல் எதிரொலி : அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த முஸ்லிம் நீதிபதிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு!

இஸ்லாமிய பழமைவாதிகள் மிரட்டல் எதிரொலி : அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த முஸ்லிம் நீதிபதிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு!

இஸ்லாமிய பழமைவாதிகள் மிரட்டல் எதிரொலி : அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த முஸ்லிம் நீதிபதிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Nov 2019 4:57 AM GMT


கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் நீதிபதி எஸ் அப்துல் நசீர். 61 வயதாகும் இவர் 1983 ஆம் ஆண்டில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்தார். பின்னர் அவர் 2003 இல் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பிப்ரவரி 17, 2017 அன்று உச்சநீதிமன்ற நீதிபதியாக பணி உயர்த்தப்பட்டார்.


இவர் சீர்திருத்த எண்ணங்கள் கொண்ட இஸ்லாமியர். இந்த காரணத்தால் இவர் இஸ்லாமிய பெண்களின் பாதுகாப்பான வாழ்வுக்காக மோடி அரசால் இயற்றப்பட்ட முத்தலாக் தடை சட்டத்தை வெளிப்படையாக ஆதரித்தார். அந்த சட்டத்தை கொண்டு வருவதிலும் முனைப்பு காட்டினார். அதே போல அயோத்தி இராம ஜென்ம பூமி வழக்கிலும் இராமர் கோவில் கட்டுவதற்கான தீர்ப்பை வெளியிட்ட நீதிபதிகள் அடங்கிய பெஞ்சில் இவரும் ஒருவர்.


இந்த நிலையில் இவர்மீது ஆத்திரம் கொண்ட இஸ்லாமிய பழமைவாத இயக்கங்களில் ஒன்றான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ) இவருக்கும், இவரது குடும்பத்தினருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறது. இது தொடர்பாக . ஏ.என்.ஐ உட்பட இந்திய பாதுகாப்பு ஏஜென்சிகளும் அரசிடம் எச்சரிக்கை அளித்துள்ளதை அடுத்து நீதிபதி அப்துல் நசீர் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்க இந்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


இதன் அடிப்படையில் கர்நாடகாவிலும், நாட்டின் இதர பகுதிகளிலும் இவர்களுக்கு முழு பாதுகாப்பை உள்ளூர் போலீசாரும் ஆங்காங்கு வழங்க வேண்டும் என அமைச்சகம் உததரவிட்டுள்ளது. https://www.opindia.com/2019/11/ayodhya-verdict-judge-s-abdul-nazeer-z-plus-security-threat-pfi-radical-islamist/


Next Story
கதிர் தொகுப்பு
Trending News