Operation Clean Money: பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது ரூ.1,500 கோடிக்கு பினாமி சொத்துக்கள் வாங்கி குவித்த சசிகலா - வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!
Operation Clean Money: பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது ரூ.1,500 கோடிக்கு பினாமி சொத்துக்கள் வாங்கி குவித்த சசிகலா - வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!
By : Kathir Webdesk
பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நேரத்தில், முறைகேடான வழியில் சுமார் 1500 கோடி ரூபாய் மதிப்பிலான பினாமி சொத்துக்களை, சசிகலா வாங்கி குவித்ததாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டது. அந்த காலக்கட்டத்தில் சசிகலா தன்னிடம் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி பினாமி சொத்துக்கள் வாங்கியதாக கூறப்படுகிறது. சுமார் ரூ.1,500 கோடிக்கு அவர் அப்போது சொத்துக்களை வாங்கி குவித்ததாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த சொத்துக்கள் அனைத்தும் நிறுவனங்களாக வாங்கப்பட்டதுடன், அந்த நிறுவனங்களை சசிகலா தனது பெயரிலோ அல்லது தனது குடும்பத்தினர் பெயரிலோ பதிவு செய்து மாற்றம் செய்து கொள்ளாமல், அதற்கு பதில் அந்த நிறுவனங்களின் உரிமையாளர்களின் பெயரிலேயே தொடர்ந்து செயல்பட அனுமதித்தார். நிறுவனங்களின் மொத்த கட்டுப்பாடும் சசிகலா வசம் இருந்தது. இதில், பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மால், கோவையில் செந்தில் பேப்பர் போர்டு, கோவையில் உள்ள ஸ்ரீலட்சுமி ஜுவல்லரி, புதுச்சேரியில் உள்ள ரிசார்ட் ஆகியவை அடங்கும்.
இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அந்த சமயத்தில்தான் பணம் மதிப்பிழப்பு நோட்டுகளை பயன்படுத்தி அவர் இந்த சொத்துக்களை வாங்கியதாக கூறப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு 'ஆபரேசன் கிளீன் மணி' என்ற பெயரில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.
பினாமி பெயர்களில் நடத்தப்பட்டு வந்த பல நிறுவனங்களை வருமான வரித்துறையினர் முடக்கி வைத்திருந்தனர். அந்த நிறுவனங்கள் மீது பினாமி சொத்து பரிமாற்ற சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி வருமான வரித்துறையினர் சமீபத்தில் போலி நிறுவனங்களை கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். அதன்படி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான பினாமி பெயர்களில் உள்ள 7 நிறுவனங்கள் தற்காலிகமாக கையகப்படுத்தப்பட்டு உள்ளன.