ஒரே காலாண்டில் 85 ஆயிரம் பேருக்கு வேலை - மந்தநிலை என்ற மாயயை உடைத்த புள்ளிவிவரம்!
ஒரே காலாண்டில் 85 ஆயிரம் பேருக்கு வேலை - மந்தநிலை என்ற மாயயை உடைத்த புள்ளிவிவரம்!
By : Kathir Webdesk
இந்தியாவில் மந்தநிலை என்று ஊடகங்கள் சித்தரித்து வரும் வேளையில், இதுவரை இல்லாத சாதனை அளவாக ஐ.டி துறையில் வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த காலாண்டில் மட்டும், ஏப்ரல்-ஜூன் மாதத்தில் 85 ஆயிரம் பேர் புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒரே காலாண்டில் இத்தனை பேர் பணிக்கு சேர்க்கப்பட்டது, கடந்த ஆறு வருடங்களில் இல்லாத சாதனை அளவாக பதிவாகியுள்ளதாக CLSA அமைப்பு தெரிவித்துள்ளது. தேவை அதிகரித்துள்ளதால், இன்னும் ஐ.டி துறையில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும், அடுத்த கட்ட நிலைக்கு செல்லும் என்றும் அத்துறை வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
மந்தம், வீழ்ச்சி, வேலையிழப்பு என பல செய்திகள் வெளியாகி வருகின்ற நேரத்தில் இது போன்ற புள்ளி விவரங்கள், இந்த பொருளாதாரத்தின் ஸ்திர தன்மையை காட்டுகின்றன. கோட்டக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் கடந்த ஆக்ஸ்ட் 20 ம் தேதியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது. இதனால் தேவை தற்போதைக்கு குறைந்திருக்கலாம். ஆனால் அது நாம் நினைக்கும் அளவுக்கு மிக மோசமாக இல்லை, அது வளர்ச்சி கண்டு வருகிறது என்றும் கூறியுள்ளது.
இதே எடெல்வைஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதார மந்தம் நிலவி வரும் தற்போதைய நிலையில், நுகர்வில் மாற்றம் இல்லை. அதிகளவில் வளர்ச்சி இல்லை என்றும் கூறியுள்ளது.
மேலும் நுகர்வோர் நிறுவனங்களின் கூற்றுப்படி, நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி குறைந்துவிட்டாலும், வளர்ச்சி நன்றாகத் தான் இருக்கிறது. உதாரணத்திற்கு ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டில் 17 சதவிகித வாளர்ச்சி கண்டுள்ளதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சில நுகர்வோர் பொருட்களின் வளர்ச்சியானது மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது நன்றாகத் தான் உள்ளது.
குறிப்பாக ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் வளர்ச்சி 5 சதவிகிதமாக இருந்தது. இது கடந்த ,மார்ச் காலாண்டில் 7 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவே கடந்த மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும்போது இது மிதமான வளர்ச்சியாகும். இது தவிர மாரிக்கோ லிமிடெட், கோத்ரேஜ் கன்ஷூயூமர், டாபர் இந்தியா, ஐ.டி.சி உள்ளிட்ட நிறுவனங்களின் வளர்ச்சி 6%, 5% மற்றும் 9.6%, 3% சதவிகித வளர்ச்சியையும் இருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆக நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டுகளில், இந்த நுகர்வோர் பொருட்களின் தேவை அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பருவமழையின் காரணமாக மக்களின் கைகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்றும், இதனால் தேவை மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.