மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்- அண்ணாமலை!
மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
By : Karthiga
மூன்றாவது முறையாக இன்னும் அதிகமான தொகுதிகளைப் பெற்று பாஜக ஆட்சி அமைப்பது உறுதி. மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். பாஜக மீது எந்தவித குறையும் இல்லை. எனவே வெற்றியை கொண்டாட தயாராகுங்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது ஆறாம் கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் ஏழாம் கட்ட தேர்தல் ஜூன் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் நிறைவடைந்த உடன் கேரளா ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழகத்தில் தேர்தல் முடிவடைந்த போதிலும் மற்ற மாநிலங்களிலும் பாஜகவுக்கு ஆதரவாக அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் மும்முறமாக ஈடுபட்டார் .
இந்த சூழ்நிலையில் தமிழக பாஜக சார்பில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்தார். சென்னை அமைந்த கரையில் உள்ள அய்யாவு மஹாலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்து வரும் இந்த கூட்டத்தில் மாநில பொறுப்பாளர்கள் நாடாளுமன்ற தேர்தல் குழு மாவட்ட தலைவர்கள், அணி தலைவர்கள், பாஜக வேட்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர் .
கூட்டத்தில் அண்ணாமலை பேசுகையில், இந்தியா கூட்டணியின் தலைவர்கள் பிரதமர் கனவில் உள்ளனர். இந்த கனவு வருகிற ஜூன் நான்காம் தேதி காலை 11 மணி வரை மட்டுமே இருக்கும். மூன்றாவது முறையாக இன்னும் அதிகமான தொகுதிகளை பெற்று பாஜக ஆட்சி அமைப்பது உறுதி. மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் .பாஜக மீது எந்தவித குறையும் இல்லை. எனவே வெற்றியை கொண்டாடத் தயாராகுங்கள் .இந்த முறை தென்னிந்தியாவில் மட்டுமே புதிய துவக்கமாக அதிகமான தொகுதிகளை வெல்வோம். ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு வடக்கு தெற்கு என்ற பேச்சு இருக்காது தெலுங்கானாவில் பாஜக பத்து இடங்களில் வெல்வது உறுதி .ஜூன் நான்காம் தேதி பாஜக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவதை பார்ப்பீர்கள் என்று பேசினார்.
SOURCE :Dinaseithi