Begin typing your search above and press return to search.
செங்கோல் விஷயத்தில் எதிர்க்கட்சித் தலைவரிடம் கூட ஆதரவு பெற்ற மத்திய அரசின் பெருமை
புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டதற்கு சசிதரூர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
By : Karthiga
டெல்லியில் நேற்று திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டது. ஆங்கிலேயர்களிடம் இருந்து நாடு விடுதலை பெற்ற போது ஆட்சிமாற்றத்தின் அடையாளமாக இது வழங்கப்பட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது . ஆனால் இதை காங்கிரஸ் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. எனினும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் சசிதரூரரும் செங்கோலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் 'செங்கோல் சர்ச்சையில் இருதரப்பும் நல்ல வாதங்கள் எடுத்து வைக்கின்றன என்பது எனது சொந்த கருத்து. இந்த பிரச்சனை சமரசத்துக்குரியதுதான் ஏனெனில் நமது நிகழ்காலத்தின் மதிப்பீடுகளை உறுதிப்படுத்த கடந்த காலத்தில் இருந்து இந்த சின்னத்தை தழுவிக் கொள்வோம்' என குறிப்பிட்டு இருந்தார்.
Next Story