பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் திருவாரூரில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
By : Karthiga
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி திருவாரூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் மனித சங்கிலி போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சோமசுந்தரம் முத்துவேல் ஆகியோர் தலைமை தாங்கினார் .தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில உயர்நிலைக் குழு உறுப்பினர் ரவி ,தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில உயர்நிலைக் குழு உறுப்பினர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து தெற்கு வீதி வழியாக பழைய பஸ் நிலையம் செல்லும் சாலையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனித சங்கிலியாக கைகோர்த்து நின்றனர்.