'இப்படி ஏமாத்துவாங்கன்னு நினைக்கல' - தி.மு.க வாக்குறுதி குறித்து புலம்பி தவிக்கும் ஜாக்டோ-ஜியோ
பழைய பென்ஷன் தொகை மீண்டும் அறிவிக்க வேண்டும் என ஜாக்டோ-ஜியோ வின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பரசு தெரிவித்துள்ளார்.
By : Mohan Raj
பழைய பென்ஷன் தொகை மீண்டும் அறிவிக்க வேண்டும் என ஜாக்டோ-ஜியோ வின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பரசு தெரிவித்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைமை அலுவலகத்தில் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது அதன் பின்னர் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு மற்றும் பூ.தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அன்பரசு தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் விடியல் பிறக்கும் என முதலமைச்சர் சொன்னதாக குறிப்பிட்ட அவர், முதலமைச்சரை மக்கள் நம்பி இருப்பதாக தெரிவித்தார். மேலும் ஐந்து ஆண்டுகளில் செய்யக்கூடிய சேவைகளை ஒரே ஆண்டு வீட்டில் செய்துவிட்டேன் என சொல்லும் முதல்வர் 80 சதவீத தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றி உள்ளதாக வருகிறார் என்றார் அன்பரசு.
மேலும் பேசியவர் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் தி.மு.க அரசு வர வேண்டும் என மன நிறைவோடு வாக்களித்ததாகவும், அதன் அடிப்படையில் தி.மு.க ஆட்சி அமைந்ததாகவும் ஆனால் தற்பொழுது தங்கள் உரிமைகளை பறிக்கும் விதமாகத்தான் இந்த அரசு செயல்பட்டு வருவதாகவும் குற்றம் தெரிவித்தார். மேலும் பழைய பென்ஷன் தொகையை மீண்டும் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.