Kathir News
Begin typing your search above and press return to search.

படம் பார்க்க A Cube புதிய மொபைல் ஆப் கண்டுபிடித்திருக்கும் நடிகர் ஜெய் ஆகாஷ்!

படம் பார்க்க A Cube புதிய மொபைல் ஆப் கண்டுபிடித்திருக்கும் நடிகர் ஜெய் ஆகாஷ்!

படம் பார்க்க A Cube புதிய  மொபைல் ஆப் கண்டுபிடித்திருக்கும் நடிகர் ஜெய் ஆகாஷ்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 March 2020 4:33 PM IST

நடிகர் ஜெய் ஆகாஷ் தமிழில் குறிப்பிடதக்க நடிகராக விளங்குபவர். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் கலக்குபவர். இவர் படங்கள் தமிழ் தவிர்த்து தெலுங்கு மொழியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது "அடங்காத காளை" என்னும் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து, இயக்கிவருகிறார். மேலும் ரசிகர்கள் படம் பார்க்க A Cube எனும் புதிய மோபைல் ஆப் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது...

தற்போது "அடங்காத காளை" படத்தை நடித்து, தயாரித்து இயக்கியுள்ளேன். இப்படத்தில் எனக்கு அப்பா மகன் என இரு வேடங்கள். அப்பா ஒரு காவல்துறை அதிகாரி ஆனால் கெட்டவர். மகன் சாப்ட்வேர் என்ஞ்னியர் அவன் கெட்டவனா? நல்லவனா? என்பது ரகசியம். நடிகர் சாம்ஸ் எனது நண்பனாக ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நாயகிகளாக ஆர்த்தி சுரேஷ், கவிதா, குஷி ஆகியோர் நடித்துள்ளார்கள். அப்பா வேடத்திற்கு ஜோடியாக தொலைக்காட்சி நடிகை தேவி கிருபா நடிக்கிறார். இசை UK முரளி செய்துள்ளார். ஒளிப்பதிவு சக்ரி செய்துள்ளார். இப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வருகிறது. தெலுங்கில் இப்படம் "அந்தால ராக்சஷடு" எனும் தலைப்பில் வருகிறது. இதன் படப்பிடிப்பு 50 சதவீதம் சென்னையிலும் 50 சதவீதம் ஹைதராபாத்திலும் நடத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தை வெளியிட ஒரு புதிய ஆப் ஒன்றை வடிவமைத்துள்ளோம். இந்த ஆப் ரசிகர்கள் படம் பார்க்க மிகச்சிறந்த, எளிய வழியாக இருக்கும். வருகிற 18ந்தேதி எனது பிறந்த நாளன்று A Cube ஆப்பை வெளியிடுகிறோம்.

இந்த ஆப்பை அனைவரும் தங்கள் மொபைலில் இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம். இந்த ஆப்பில் வாராவாரம் ஒரு படத்தை வெளியிடவுள்ளோம். முதல் படமாக எனது "அடங்காத காளை" படம் வெளியாகிறது. இந்த ஆப்பின் சிறப்பு என்னவெனில் படத்தை நீங்கள் தியேட்டரில் பார்க்க முடியாவிட்டால் 50 ரூபாய் கட்டி இந்த ஆப்பில் இரண்டு நாட்கள் வரை பார்த்து கொள்ளலாம். நீங்கள் பார்த்த பிறகு அந்த இரண்டு நாட்களில் வேறு எவர் வேண்டுமானாலும் பார்க்கலாம். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒரு படம் வெளியிட இருக்கிறோம். எனது அடுத்த படம் "புதிய மனிதன்" தெலுங்கில் "கொத்தகா உன்னாடு" என்றும் வரும் படம் இந்த ஆப்பில் அடுத்து வெளியாகும். வேறு பல தயாரிப்பாளர்களும் தங்களது படத்தை இந்த A Cube ஆப்பில் வெளியிட விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அவர்களது படமும் A Cube ஆப்பில் வெளியாகும். நீங்கள் ஒரு திரைப்படம் பார்க்க குடும்பத்துடன் தியேட்டர் போனால் அதன் செலவு தற்காலத்தில் 1000 ரூபாய்க்கும் மேல் ஆகிவிடும். ஆனால் இந்த A Cube ஆப்பில் நீங்கள் மிக குறைந்த கட்டணத்தில் குடும்பம் மொத்தமும் பார்க்க முடியும். அனைவரும் மிக எளிதான வழியில் படம் பார்க்க ஒரு மிகச்சிறந்த ஆப்பாக A Cube ஆப் இருக்கும் என்றார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News