Kathir News
Begin typing your search above and press return to search.

இலங்கை பிரச்சனையை இன கண்ணோட்டத்துடன் பார்க்கவில்லை - மாநிலங்களவையில் அமைச்சர் ஜெய்சங்கர்

இலங்கைக்கு உதவும் பிரச்சினையில் இன கண்ணோட்டம் பார்க்கவில்லை என்று மாநில அளவில் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.

இலங்கை பிரச்சனையை இன கண்ணோட்டத்துடன் பார்க்கவில்லை - மாநிலங்களவையில் அமைச்சர் ஜெய்சங்கர்

KarthigaBy : Karthiga

  |  8 Dec 2022 2:00 PM GMT

வெளியுறவு கொள்கை தொடர்பாக மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தானாக முன்வந்து அறிக்கை தாக்கல் செய்தார். அதன் மீது எம்.பிக்கள் கேட்ட விளக்கங்களுக்கு அவர் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. அந்நாட்டுக்கு பொருளாதார உதவிகள் அளித்தோம். ஒட்டுமொத்த இலங்கைக்கும் உதவினோம். அதில் தமிழ் இனமும் அடங்கும். இலங்கைக்கு உதவும் பிரச்சனையில் இனக் கண்ணோட்டத்தை பின்பற்றவில்லை. நம் அண்டை நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும்போது நாம் உதவாமல் இருந்தால் நமது பொறுப்பை தட்டி கழித்த மாதிரி ஆகிவிடும். ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான ஓட்டு எடுப்பை இந்தியா புறக்கணித்தது உண்மைதான்.


இது நமது நீண்ட கால நிலைப்பாடு. முந்தைய அரசுகளும் இதையை பின்பற்றின. இலங்கை தமிழர்களின் நலன்களை பாதுகாக்க இதுதான் ஆக்கப்பூர்வமான வழிமுறை என்பதுதான் இந்தியாவின் நீண்ட கால நிலைப்பாடு. அதே தொடர்ந்து பின்பற்றுவோம். பாலஸ்தீன பிரச்சனையில் இரு நாடுகள் தீர்வை இந்தியா ஆதரிக்கிறது. அந்த இரு நாடுகளும் அருகருகே அமைதியாக வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். கத்தாரில் 100 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ள இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகளையும் நைஜீரியாவில் சிறையில் உள்ள 16 இந்திய மாணவிகளையும் மீட்க இந்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது இவ்வாறு அவர் கூறினார.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News