இந்தியர்களை மீட்பதற்கே முன்னுரிமை-அமைச்சர் ஜெய்சங்கர் !
ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
By : Shiva
ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு இந்தியா கொண்டு வருவதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் இது குறித்து ஐநா மற்றும் அமெரிக்க அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் ஐநா பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். மற்ற நாடுகளைப் போல் இந்தியாவும் ஆப்கானிஸ்தானின் நிலையை கண்காணித்து வருவதாகவும் கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் இந்தியா பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் மக்களுடளான உறவு தலிபான்களின் நடவடிக்கையை பொருத்தே அமையும் என்றும் அவர் அப்போது தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வரும் நிலையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரும் அதை உறுதிபடுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது
Source: Dinamani