Kathir News
Begin typing your search above and press return to search.

இனி ஜல்லிகட்டில் நாட்டு மாடுகள் மட்டுமே !-சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி !

கலப்பின மாடுகளுக்கு ஜல்லிகட்டில் தடை

இனி ஜல்லிகட்டில் நாட்டு மாடுகள் மட்டுமே !-சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி !
X

TamilVani BBy : TamilVani B

  |  2 Sept 2021 7:45 PM IST

ஜல்லிகட்டிற்கு நாட்டு மாடுகளை மட்டும் அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிகட்டு. ஏறுதழுவுதல் என்ற பெயரில் சங்ககாலம் தொட்டே வழி வழியாய் தமிழ்நாட்டில் விளையாட்டபட்டு வருகிறது. ஆனால், தற்போது நடத்தப்படும் ஜல்லிகட்டில் கலப்பினமாடுகளை விளையாட அனுமதிக்கின்றனர். கலப்பின மாடுகளின் திமில்கள் பெரியதாக இருக்காது இதனால் வீரர்கள் வெற்றி பெற முடியாத நிலை ஏற்படும் இது குறித்து சில ஜல்லிகட்டு வீரர்களும் ஆர்வலர்களும் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில், சென்னையை சேர்ந்த சேசன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் ஜல்லிகட்டில் கலப்பின மாடுகள் மற்றும் வெளிநாட்டு மாடுகளை பயன்படுத்த தடை கோரப்பட்டிருந்தது

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய அமர்வு ஜல்லிகட்டு போட்டிகளில் கலப்பின மாடுகளை அனுமதிக்க கூடாது எனவும் போட்டியில் பங்கேற்கும் மாடுகள் நாட்டு மாடுகள் தான் என கால்நடை மருத்துவர்கள் சான்றளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். இதுகுறித்து பொய் சான்றிதழ் அளித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.

அதுமட்டுமின்றி நாட்டுமாடுகள் இனப்பெருக்கதிற்கு வழி வகுக்கவும், செயற்கை கருத்தரித்தலை தவிர்பதற்கும் அரசு நடவடிக்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்த அறிவிப்பால் நாட்டு மாடுகள் வைத்திருப்போர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த உத்தரவு நாட்டு மாடு வளர்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்க படுகிறது.

Source: தினமலர்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News