இந்து முறைப்படி தமிழக வாலிபரை கரம்பிடித்த ஜப்பான் மணப்பெண்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தைவான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளார்.
By : Mohan Raj
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தைவான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், ஜப்பானில் உள்ள டொயோட்டோ யுனிவர்சிட்டியில் விஞ்ஞானி மற்றும் கல்லூரி விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இதே கல்லூரியில் பணிபுரியும் தைவான் நாட்டைச் சேர்ந்த சீயான் ஜெயா ஜூன் என்பவருக்கும் ராஜேந்திரனுக்கும் ஜப்பானில் காதல் மலர்ந்துள்ளது.
இருவரும் தங்கள் காதலை வீட்டில் தெரிவித்துள்ளார்கள் இதனால் இருவர் வீட்டிலும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில் இந்து முறைப்படி திருமணம் செய்ய ஜப்பானிலிருந்து சியான் ஜியோ ஜூன் காவேரிப்பட்டணம் வந்தார். இன்று காலை காவேரிப்பட்டணம் கோட்டபிரசன்ன சுவாமி கோவில் உறவினர்கள் புடை சூழ இந்து முறைப்படி ஜப்பான் பெண்ணை மணமுடைத்தார் தமிழக வாலிபர் ராஜேந்திரன். இந்த திருமணம் முடிந்தவுடன் மணமகள் சீயான் ஜெயா ஜூன் கூறியது நாங்கள் இருவரும் காதலித்து இந்து முறைப்படி கலாச்சார திருமணம் செய்தது மகிழ்ச்சியாக உள்ளது' என தெரிவித்துள்ளார்.