Kathir News
Begin typing your search above and press return to search.

ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் - 40 ஆயிரத்து 712 பேர் தேர்ச்சி

ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியானது. 40 ஆயிரத்து 712 பேர் தேர்ச்சி

ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் - 40 ஆயிரத்து 712 பேர் தேர்ச்சி

KarthigaBy : Karthiga

  |  12 Sep 2022 12:15 PM GMT

நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி , ஐ.ஐ.ஐ.டி என்.ஐ. டி போன்ற மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு ஜே. இ.இ.முதன்மை மற்றும் அட்வான்ஸ்டு தேர்வுகளாக நடத்தப்படுகிறது. முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக நடைபெறும் அட்வான்ஸ்டு தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டு அதில் தேர்ச்சி அடைபவர்கள் தகுதியானவர்களாக கருதப்படுவார்கள்.


அந்த வகையில் முதன்மைத் தேர்வு முடிவு கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி ஜெ.இ.இ அட்வான்ஸ் தேர்வு நடந்தது.இதற்கான தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டு இருக்கிறது. அட்வான்ஸ்டு தேர்வவை நாடு முழுவதும் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 930 மாணவர்கள் , 33 ஆயிரத்து 608 மாணவிகள் என மொத்தம் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 538 தேர்வர்கள் எழுதினார்கள். இதில் 34 ஆயிரத்து 196 மாணவர்கள் 6516 மாணவிகள் என 40 ஆயிரத்து 712 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர் .இது கடந்தாண்டு தேர்ச்சி சதவீதத்தை விட குறைவு என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


இந்த தேர்வில் மாணவர் ஆர்.கே.ஷிஷிர் 360 மதிப்பெண்ணுக்கு 314 மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்திருக்கிறார். மாணவிகள் தரப்பில் தனிஷ்கா காப்ரா என்பவர் 277 மதிப்பெண் பெற்று முதலிடத்தில் உள்ளார். இவர் பொது தரவரிசையில் 16வது இடத்தில் இருக்கிறார் .பொதுவாக எந்த தேர்வாக இருந்தாலும் அதில் மாணவர்களை விட மாணவிகளை அதிக அளவில் சாதித்திருப்பார்கள். ஆனால் ஜே. இ. இ அட்வான்ஸடு தேர்வில் மாணவர்களின் ஆதிக்கமே அதிகம் இருப்பதை பார்க்க முடிகிறது. குறிப்பாக பொதுத் தேர்வு வரிசைபட்டியலில் முதல் பதினைந்து இடத்தில் மாணவர்களே தக்க வைத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News