ஜார்கண்ட் : பக்ரீத்தின் போது பசுவைக் கொன்று, இறைச்சி கோவில் அருகே வீச்சு - பதற்றம்.!
பசு இறைச்சியை கைப்பற்றி, காவல் நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹஜாரிபக் நகரத்தில், சனிக்கிழமை அன்று இரண்டு சமூகங்களுக்கு இடையே பதற்றநிலை ஏற்பட்டது. நரசிங்க கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில், ஒரு பசு பக்ரீத் கொண்டாட்டங்களுக்காக கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
உள்ளூர் வாசிகளின் தகவலின்படி, கிராமத்தில் கோவிலுக்கு அருகில் இருந்த ஒரு வீட்டில் இருந்து ரத்தம் பெருகி வருவதை கவனித்தனர். உடனே கோவிலின்அருகில் இருந்த ஒரு காவலர் வாகனத்தை அணுகினர். போலீஸ் வருகிறார்கள் என அறிந்தவுடன் அந்த வீட்டில் இருந்த நபர்கள் இடத்தைவிட்டு தப்பித்து சென்றனர். தகவல்களின்படி காவல்துறையினர், அந்த வீட்டிலிருந்த பசு இறைச்சியை கைப்பற்றினர். காவல் நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
வருகின்ற தகவல்களின்படி, பசு வதை இரண்டு தரப்பிலிருந்தும் கல் வீச்சு சூழலை தொடங்கிவைத்தது. காவல்துறையினர் அந்த இடத்தை அடைந்தபோது அவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்ததால் அவர்கள் மீதும் கற்கள் எறியப்பட்டன.எனவே ஆரம்பத்தில் காவலர்கள் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தவறினர். தகவல்களின்படி, சமூக விரோதிகள் ஒரு மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தது மட்டுமல்லாமல் பல வாகனங்களை அடித்து நொறுக்கினர்.
தகவல்களின்படி ஒரு விரைவு அதிரடிப்படை அங்கே கொண்டுவரப்பட்டதாகவும் பதினோரு மணி அளவில் லத்தி சார்ஜ் செய்தும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் ஒழுங்கற்ற கூட்டத்தை போலீசார் கலைத்ததாகவும் கூறப்படுகிறது. SDPO கமல் கிஷோர் கல் வீசியவர்களை லத்தி கொண்டு விரட்டினார். உயரதிகாரிகள் அந்த இடத்தில் பதற்றத்தை தணிக்க முயன்று மக்களை அவர்களின் வீடுகளுக்குத் திரும்பி செல்லுமாறு கேட்டுக் கொண்டனர்.
இரண்டு சமூகங்களுக்கு இடையிலான மோதலில் பலரும் காயமுற்றனர். இதில் காவலர்களும் அடக்கம் துணை ஆய்வாளர் சந்தீப் குமார் சிங், விரைவு அதிரடி படையுடன் சென்று இந்த வழக்கில் விசாரணை நடத்துமாறும், சமூக விரோதிகளை சட்டத்தித்தின் முன் கொண்டு வருமாறு உத்தரவிட்டுள்ளார்.மேலும் அவர் மக்களை வதந்தி பரப்புவதோ, கல் வீச்சு தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதோ கூடாது என்றும் எச்சரித்ததாக கூறப்படுகிறது. தகவல்களின்படி இரண்டு சமூகங்களுக்கு இடையில் உள்ள பதற்றத்தை தணிக்க அமைதி கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.