Kathir News
Begin typing your search above and press return to search.

ஒவ்வொரு மாணவருக்கு ஆண்டுக்கு ₹6.95 இலட்சத்தை செலவு செய்யும் ஜே.என்.யு பல்கலைக்கழகம்! இந்தியா பலனடைகிறதா? அல்லது தவறான திட்டமிடலா?

ஒவ்வொரு மாணவருக்கு ஆண்டுக்கு ₹6.95 இலட்சத்தை செலவு செய்யும் ஜே.என்.யு பல்கலைக்கழகம்! இந்தியா பலனடைகிறதா? அல்லது தவறான திட்டமிடலா?

ஒவ்வொரு மாணவருக்கு ஆண்டுக்கு ₹6.95 இலட்சத்தை செலவு செய்யும் ஜே.என்.யு பல்கலைக்கழகம்! இந்தியா பலனடைகிறதா? அல்லது தவறான திட்டமிடலா?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Nov 2019 8:44 AM IST


எச்சரிக்கை: இந்த கட்டுரையை படிப்பதற்கு, தயவு செய்து பாரபட்சமின்றி இருங்கள். நாங்கள் கேலி செய்யப்படுவேன் என்று நன்றாக தெரியும். நாங்கள் ஜே.என்.யுவின் அரசியலில் நிபுணர் இல்லை. இருப்பினும், ஜே.என்.யு குறித்து வலைத்தளங்களிலும் பிற பொது ஊடகங்களிலும் உள்ள அடிப்படை தரவுகள், தகவல்களை நாம் அனைவரும் புரிந்துக் கொள்ள முடியும். இருப்பினும், சிக்கல் என்னவென்றால், இந்தத் தரவு மிகவும் ஒழுங்கமைக்கப்படாததாக உள்ளது. இதைப் பற்றி யாரும் அறிய அக்கறை காட்டவில்லை. குறைந்தபட்சம் அதை நாங்கள் கவனித்தோம். நீங்கள் உங்கள் சொந்த அனுமானங்களை முன்வைக்கலாம். இக்கட்டுரையின் மூலம் சில முக்கியமான தகவல்களை தொகுக்க முனைந்துள்ளோம்.


ஜே.என்.யு-வில் எத்தனை மாணவர்கள் உள்ளனர்? என்னென்ன படிப்புகள் உள்ளன?

ஜே.என்.யுவில் மொத்தம் 8,000 மாணவர்கள் பயில்கின்றனர். இதில் பெரும் பங்காக 57% மாணவர்கள் சமூக அறிவியல், மொழி, இலக்கியம் மற்றும் கலையை தேர்வு செய்துள்ளனர். அதாவது மொத்தம் 4,578 மாணவர்கள். சர்வேதச படிப்பை 15 சதவீத மாணவர்கள் அதாவது 1210 மாணவர்கள் தேர்வு செய்து பயின்று வருகின்றனர். எனவே, இந்த இரண்டு பிரிவில் மட்டுமே 72 சதவீத மாணவர்கள் பயில்கின்றனர்.



ஒவ்வொரு மாணவருக்கு ஆண்டுக்கு ₹6.95 இலட்சத்தை செலவு செய்யும் ஜே.என்.யு பல்கலைக்கழகம்! இந்தியா பலனடைகிறதா? அல்லது தவறான திட்டமிடலா?


சுவாரசியமான தகவல் என்னவெனில் இங்கிருக்கும் மொத்த மாணவர் எண்ணிக்கையில் 55% மாணவர்கள் அதாவது 4359 மாணவர்கள் எம்.பில் அல்லது முனைவர் ஆய்வு படிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.


உலகின் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் இளங்கலை படிப்பிலிருந்து முதுகலை படிப்பிற்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தே இருக்கும். அதுவும், குறிப்பாக முனைவர் ஆய்வு படிப்பை தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.


மேலும், மாணவர்களின் சூழல் காரணமாக பெரும்பாலான மாணவர்கள் இளங்கலை அல்லது முதுகலை படித்த உடனேயே பணியை தேர்வு செய்கிறார்கள். ஆய்வு படிப்பை நோக்கி செல்லாமல் தங்கள் தொழில் வாழ்க்கையை தேர்வு செய்கிறார்கள். ஆனால் ஏன் ஜே.என்.யு-வில் மாணவர்கள் மட்டும் எம்.பில்லையும் ஆய்வு படிப்பையும் அதிக அளவில் தேர்வு செய்கிறார்கள் என்ற காரணம் தெரியவில்லை.


ஒரு பல்கலைக்கழகத்தை நடத்துவதற்கான செலவு என்ன? ஜே .என்.யு-வை நடத்துவதற்கு மத்திய அரசு எவ்வளவு செலவு செய்கிறது?

ஜே .என்.யு-வின் 2018-ஆம் ஆண்டின் லாப நஷ்ட கணக்கை(Profit & Loss Account) பார்க்கலாம். 600 பக்க ஆண்டு அறிக்கையில் ஒரு பக்கம் இங்கே உங்களுக்காக. பெரும்பாலான லாப நஷ்ட கணக்கு அறிக்கையில் முதல் பக்கத்தில் இருக்கும் இந்த பக்கம், இந்த ஜே .என்.யுவின் அறிக்கையில் மட்டும் எங்கோ கண்ணுக்கு எட்டாத மைய பகுதியில் அமைந்திருப்பது ஆச்சரியம். இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியவை இங்கே:



ஒவ்வொரு மாணவருக்கு ஆண்டுக்கு ₹6.95 இலட்சத்தை செலவு செய்யும் ஜே.என்.யு பல்கலைக்கழகம்! இந்தியா பலனடைகிறதா? அல்லது தவறான திட்டமிடலா?


ஜே .என்.யு-வின் ஒரு வருட இயக்கத்திற்கும் செயல்பாட்டிற்கும் மொத்தம் 556 கோடி செலவு செய்யப்படுகிறது. இதன் நிலையான சொத்தை தவிர இதற்கென பிரமாண்ட நிலமும், அரசாங்க பணத்தின் தயவில் பெரும் கட்டமைப்பு மற்றும் கட்டிடங்களும் உள்ளன.


எனில் ஜே .என்.யு பல்கலைக்கழகம் ஒரு மாணவருக்கு செலவு செய்யும் தொகை என்ன? 556 கோடியை 8,000 மாணவர்களுக்கென வகுத்தால் ஒரு மாணவருக்கு சராசரியாக 6.95 இலட்சம் ஆகிறது. ஆனால், பல்கலைக்கழகமோ ஒரு மாணவருக்கு வெறும் 2.33 இலட்சம் செலவு ஆவதாக தவறான கணக்கை காட்டுகிறது. பல்கலைக்கழகத்தின் மொத்த செலவும் மொத்த மாணவர்களுக்கும் வகுக்கப்பட வேண்டும். காரணம் பல்கலைக்கழகம் என்பது மாணவர்களுக்கானது. எனவே அங்கு ஆகும் செலவு அவர்களுக்காவே செய்யப்படுவது. எனவே அதை மொத்தமாக வகுக்க வேண்டும்.


இதர வருவாய்களை புறம் தள்ளி வெறும் அரசாங்க மானியத்தை மட்டுமே வகுத்தால் கூட 8,000 மாணவர்களுக்கு 352 கோடி மானியம் எனில் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு 4.4 இலட்சம் அரசாங்கம் வழங்குகிறது. மக்களின் பணம் எவ்வாறு இப்படி செலவிடப்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது. பொது மக்களின் பணம் பெரும் மானியமாக இங்கே செலவிடப்படுகிறது. ஆனால், அதற்க்கு தரமான திறமைகள் இங்கே உருவாகின்றனவா என்றால் இல்லை. இங்கே வழங்கப்படும் மானியம் ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் ஆகியவைகளுக்கே சவால் விடும் வகையில் அமைந்துள்ளது.


ஜே .என்.யுவில் நடத்தப்படும் ஆய்வுகள், வெளியீடுகள், மற்றும் காப்புரிமைகள்


ஜே .என்.யு என்பது அறிவு சார்ந்த ஒரு கல்வி நிறுவனம். இது ஜனரஞ்சகமான கல்வி நிறுவனம் அல்ல என்பது மாணவர்களின் கருத்து. இது ஒரு வகையில் ஏற்று கொள்ளக்கூடியது தான் என்றாலும். இங்கு செய்யப்படும் ஆய்வு திட்டங்களை பற்றி அறிந்துக் கொள்ள சற்று ஆழமாக துருவி பார்த்தோம். உண்மையை அறிந்தால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள், தன்னை ஒரு அறிவு சார் கல்வி நிறுவனம் என்று அழைத்துக் கொள்ளும் பல்கலைக்கழகத்தின் வலைத்தளத்தை பார்த்தால் அங்கே இருக்கும் பிம்பமே வேறு.


வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.


பதிப்புகள்/வெளியீடுகள்


இங்கே இருக்கும் ஆசிரியர்கள் தொடர்ந்து தங்களின் கட்டுரைகள், புத்தகங்கள், புத்தகளுக்கான பங்களிப்பு அதியாயங்கள், தேசிய மற்றும் சர்வதேச கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகள், பல்கலைக்கழகத்திற்கு வெளியே நிகழ்த்தப்படும் உரையின் சாரங்களை வெளியிடுகிறார்கள்.


ஆய்வுகள்


ஜே .என்.யு தங்கள் மாணவர்களும் ஆசிரியர்களும் ஆய்வுகள் செய்வதை ஊக்குவிக்கிறது. மேலும் ஆசிரியர்களின் ஆய்வுகள் சவால்மிக்கதாக இருக்கும் பட்சத்தில் தேசிய மற்றும் சர்வதேச நிதியுதவியும் கிடைக்க உதவுகிறது. தற்சமயம் 300-க்கும் மேற்பட்ட ஆய்வு திட்டங்கள் பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. டிஎஸ்டி, டிபிடி, ஐசிஎம்ஆர், சிஎஸ்ஐஆர், யுஜிசி, ஐசிஎஸ்எஸ்ஆர், ஐசிஎச்ஆர், ஐசிசிஆர், அமைச்சுகள், ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய ஆணையம், ஃபோர்டு அறக்கட்டளை, வெல்கம் டிரஸ்ட் போன்றவற்றிலிருந்தும் ஆராய்ச்சி மானியங்கள் பெறப்படுகின்றன.


ஆய்வு திட்டங்களுடன் கூடுதலாக ஆலோசனை வழங்கும் திட்டத்தையும் ஆசிரியர்கள் மேற்கொள்ள பல்கலைக்கழகம் ஊக்குவிக்கிறது. அறிவியல் பள்ளி மற்றும் சிறப்பு மையங்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அதிநவீன உபகரணங்கள் நிறுவப்பட்டு ஒரு மேம்பட்ட கருவி ஆராய்ச்சி வசதியை பல்கலைக்கழககம் நிர்மாணித்துள்ளது. காப்புரிமை மற்றும் தொழிநுட்ப இடமாற்றம் ஆகிவையற்றை பதிவு செய்வதற்கு ஏதுவாக அறிவுசார் சொத்து மேலாண்மையெனும் ஐபிஎம் அமைப்பையையும் பல்கலைக்கழகம் அமைத்துள்ளது.


இதில் எந்தவொரு திட்டத்திலும் பெயரோ தகவலோ இல்லாமல் இருப்பதை உங்களால் காண முடியும். முறையான ஆய்வு தகவல்களை, வெளியீடு குறித்த தரவுகள் குறிப்பிடப்படுவதில்லை என்பதை நம்மால் கவனிக்க முடிகிறது.


சில காப்புரிமை தகவல்களாவது இருக்கிறதா என ஆய்வு செய்தால் கிடைப்பதால் பின்வருபவை மட்டுமே:


ஆசிரியர்களால் பெறப்பட்ட காப்புரிமைகள்

• ஆர். பட்நகர் (2001-2002). நச்சு அல்லாத ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி தயாரிப்பதற்கான ஒரு செயல்முறை. இந்திய காப்புரிமை (1222 / டெல் / 2001) ஆக ஏற்றுக்கொள்ளப்பட்டது. சர்வதேச பி.சி.டி பயன்பாடு (PCT / IN2002 / 00048; WO-03-048390A1, ஜூன் 12, 2003) வெளியிடப்பட்டது. ஆர்.பட்நகர் (2001). ஆந்த்ராக்ஸ் பாதுகாப்பு ஆன்டிஜெனை அமைப்பு ரீதியாக தயாரிப்பதற்கான ஒரு செயல்முறை. இந்திய காப்புரிமை (1127 / டெல் / 2001) ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆர்.பட்நகர் (2001). ஒரு ஆந்த்ராக்ஸ் பாதுகாப்பு ஆன்டிஜென். இந்திய காப்புரிமை (1074 / டெல் / 2002) ஏற்றுக்கொள்ளப்பட்டது.


• அபர்ணா தீட்சித் (2007). நீரிழிவு எதிர்ப்பு மறுசீரமைப்பு புரதம். இந்திய காப்புரிமை மற்றும் சர்வதேச பி.சி.டி விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அபர்ண தீட்சித் (2007). ஏரோமோனாஸ் ஹைட்ரோபிலாவுக்கு எதிரான மறுசீரமைப்பு தடுப்பூசி. இந்திய காப்புரிமை விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது.


• ஆர். பட்நகர் (2008). ஆந்த்ராக்ஸுக்கு எதிரான ஒரு இம்யூனோடோமினன்ட் பி செல் எபிடோப் அடிப்படையிலான புரத தடுப்பூசி. இந்திய காப்புரிமை விண்ணப்பம் (2947 / DEL / 2008) தாக்கல் செய்யப்பட்டது. ஆர். பட்நகர் (2008). ரேபிஸுக்கு எதிரான தடுப்பூசியின் மருந்து கலவை தயாரிப்பது. இந்திய காப்புரிமை (1449 / DEL / 2008) மற்றும் சர்வதேச பி.சி.டி (பி.சி.டி / ஐ.என் .2008 / 000578) விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன.


• கே. ஜே. முகர்ஜி (2006). சைலானேஸின் அதிக மகசூல் பெறுவதற்கான செயல்முறை (காப்புரிமை விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது). கே.ஜே. முகர்ஜி (1999). ஸ்ட்ரெப்டோகினேஸின் அதிக மகசூலைப் பெறுவதற்கான செயல்முறை. கே.ஜே. முகர்ஜி (2002). ஈ.கோலி விண்ணப்ப எண் 212080 (1276 / டெல் / 2002) இல் மனித ஆல்பா இன்டர்ஃபெரான் உற்பத்தி செய்வதற்கான செயல்முறை தொழில்நுட்பம் இந்திய காப்புரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டது.


• சந்தோஷ் கே. கார், (2006). இரத்த மாதிரிகளிலிருந்து REM தூக்க இழப்பைக் கண்டறிதல் மற்றும் / அல்லது கண்டறியும் முறை. இந்திய காப்புரிமை. வெளியீட்டு தேதி: 24 அக்டோபர் 2006.


எனவே, திரு. பட்நகர், திருமதி. தீட்சித், திரு. கார் மற்றும் திரு. முகர்ஜி ஆகியோரின் நான்கு பெயர்களைத் தவிர, வேறு எந்த ஆசிரியர்களிடமும் காப்புரிமை இல்லை.


ஏதேனும் காப்புரிமைகள் மாணவர்களின் பெயர்களில் உள்ளதா என்று வலைவீசி தேட வேண்டிய சூழலே உள்ளது.


ஆய்வு படிப்பில் 57% மாணவர்கள் படித்துக்கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தில், மாணவர்கள் பெயரில் காப்புரிமை உள்ளதா என்பதை நாங்கள் தொடர்ந்து தேடிக்கொண்டேயிருக்கிறேன்.


ஜே.என்.யூ வெளியிடும் ஆராய்ச்சி பற்றிய சிறந்த கூற்றுக்களை நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? அதை வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் துண்டு பிரசுரத்தில்(Placement Brochure) உங்களால் காண முடியும். தெளிவான தரவுகள் எதுவும் இடம்பெறாமல், கடந்த காலத்தில் மாணவர்களுக்கு ஏற்படுத்தி தரப்பட்ட வேலைவாய்ப்பு குறித்து எதையும் முழுமையாக தெரிவுப்படுத்தாமல் அமைந்திருக்கும் அந்த பிரசுரம்.



ஒவ்வொரு மாணவருக்கு ஆண்டுக்கு ₹6.95 இலட்சத்தை செலவு செய்யும் ஜே.என்.யு பல்கலைக்கழகம்! இந்தியா பலனடைகிறதா? அல்லது தவறான திட்டமிடலா?


மேலே கொடுக்கப்பட்ட தரவுகளில் இருந்து சில அனுமானங்கள்

1. எம்.பில் படிப்பு மற்றும் முனைவர் ஆய்வு படிப்பு 4,360 மாணவர்கள் படித்த போதும், பத்திரிக்கைகளில் சொல்லிக்கொள்ளும் படியாக ஒரு 1000 கட்டுரைகளை கூட காண முடியவில்லை. இப்படியொரு அறிக்கையை வெளியிடும் போது குறிப்பிடும்படியாக ஒரு கட்டுரையை கூட சுட்டிக்காட்டவில்லை. எனில், ஒவ்வொரு ஆண்டும் இங்கே பயிலும் 4.5 மாணவர்களுக்கு ஒரு மாணவர் மட்டுமே ஒரே ஒரு கட்டுரையை வெளியிடுகிறார் என்பதையே இது குறிக்கிறது.


வருடந்தோறும் 600 ஆய்வு மாணவர்கள் வெளியேறும் ஒரு கல்வி நிறுவனத்தில் இந்த நிலை. எனில் இதை ஒரு தரமிக்க ஆய்வு பணியாக நாம் கணக்கில் கொள்ள முடியுமா?


2. பெரும் அளவிலான மாணவர்கள் சர்வதேச கருத்தரங்கில் பங்குக்கொள்கிறார்கள். கிட்டத்தட்ட 2000 சர்வதேச கருத்தரங்குகளில் மாணவர்கள் வருடந்தோறும் பங்கேற்கிறார்கள். ஆனால், இங்கே பங்கேற்ற பின் நடப்பது என்ன என்பது யாரும் அறியாத ஒரு புதிர். நிச்சயமாக ஒரு ஆய்வு அறிக்கையோ அல்லது ஒரு காப்புரிமையோ இதன் மூலம் கிடைப்பதில்லை.


கட்டணம் உயர்த்தப்பட்டது நியாயமானதா? ஏன் தகுதிவாந்த மாணவர்களும் இதனால் பாதிக்கப்பட வேண்டும்?


கொடுக்கப்பட்டுள்ள தரவுகளை காண்கிற போது ஜே .என்.யு-வில் இருந்து வெளியேறும் பெரும்பாலான மாணவர்களால் நாட்டிற்கு எந்த நல்ல நேர்மறை விளைவுகளும் இல்லை.



ஒவ்வொரு மாணவருக்கு ஆண்டுக்கு ₹6.95 இலட்சத்தை செலவு செய்யும் ஜே.என்.யு பல்கலைக்கழகம்! இந்தியா பலனடைகிறதா? அல்லது தவறான திட்டமிடலா?


நீங்கள் காணுகிற எண் இலட்சத்திலோ, அல்லது ஆயிரத்திலோ அல்ல வெகு சொற்பமானதாகவே இருக்கிறது.


மொத்தமாக ஒரு ஜே.என்.யு மாணவன் செலுத்துகிற கட்டணம் என்பது 240 மட்டுமே.


மிகவும் தாராளமாக நூலகத்திற்கு 6 ரூபாயும், டெபாசிட் தொகையாக 40 ரூபாயையும் மாணவர்கள் செலுத்தும்போது, இந்த கட்டணத்தை வைத்து எப்படி ஒரு பல்கலைக்கழகத்தால் அதன் செயல்பாடுகளை செம்மையாக நடத்த இயலும்? இதற்க்கேற்ற கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பது எப்படி சாத்தியம்?


ஐ.ஐ.டி டெல்லி அருகில் தான் அமைந்துள்ளது, வருடத்திற்கு 2.25 இலட்சம் கட்டணம் வசூலிக்கிறது. ஐ.ஐ.எம் வருடத்திற்கு 5 - 10 இலட்சம் வரை வசூலிக்கிறது.


இங்கெல்லாம் எந்த போராட்டத்தையும் நம்மால் காண முடிவதில்லை. காரணம் இங்கிருக்கும் மாணவர்களுக்கு தெரிகிறது படிப்பை முடிக்க வேண்டும் வேலையை பெற வேண்டும், கல்விக் கடன்களை எல்லாம் திரும்ப செலுத்தி தங்கள் நல்வாழ்வை பேண வேண்டும் என்று.


ஆனால், ஜே .என்.யு வில் இருக்கும் மாணவர்களுக்கு அந்த கவலையெல்லாம் இல்லை. அதனாலேயே தங்களுக்கு வேறு விதமான பிரச்சனைகளை தேடிக்கொள்ள அவர்களுக்கு போதுமான நேரம் கிடைக்கிறது.


ஜே .என்.யு வில் செய்யப்பட கட்டண உயர்வு என்பது நியாயமானதா?


எந்த அரசியல் நிலைப்பாட்டையும் நாங்கள் பதிவு செய்ய விரும்பவில்லை. ஆனால், பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ தரவுகளை கொண்டு ஆராய்கின்ற போது, நம்மால் ஒரு முடிவுக்கு வர முடிகிறது. ஜே .என்.யு என்பது தவறான ஒரு சமூகத்திற்கான அடையாளம். எப்போது ஒன்றை நீங்கள் இலவசமாக தருகிறீர்களோ அப்போது மக்களுக்கு வேலை செய்ய மனம் வராது. எனில் அரசாங்க மானியம் கிடைக்கிறபோது ஏன் மாணவர்கள் வேலை தேடவும் அல்லது ஒரு ஆய்வினை சமர்ப்பிக்கவும் அக்கறை எடுத்து கொள்ள வேண்டும்?


ஜே.என்.யு என்பது உயரடுக்குகளின் தவறான ஒரு எடுத்துக்காட்டு. இது நிறுத்தப்பபட வேண்டும். மாணவர்கள் ஒரு ஆய்வு படிப்பை முடிக்க தங்கள் வாழ்நாள் முழுவதையும் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் தேசத்திற்கு இது போன்ற ஒரு ஆய்வு அறிஞர்களை உருவாக்கும் அளவு பொறுமையோ அல்லது பணமோ இல்லை.


சமூக அறிவியலுக்கான மிகப்பெரிய ஆய்வு மையம் நாங்கள் என கூறிக்கொள்ளும் ஒரு பிரம்மாண்ட கல்வி நிறுவனத்திடமிருந்து இது போன்ற ஒரு சமூக சீர்திருத்த கருத்து வெளிவராமல் இருப்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவது புரியாத புதிர்தானே?


This article is translated from Swarajya Magazine's column Economics Of Funding JNU: Educating A JNU Student Costs A Whopping Rs 6.95 Lakh Per Year. Does India Benefit?


Next Story
கதிர் தொகுப்பு
Trending News