Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடியின் மேற்கூரை சோலார் திட்டத்தில் வீட்டில் இருந்தபடியே சேரலாம்- அஞ்சல் துறை அறிமுகம்!

பிரதமர் மோடியின் மேற்கூரை சோலார் திட்டத்தில் சேருவதற்கு வீட்டில் இருந்தபடியே சேரும் வசதியை அஞ்சல் துறை அறிமுகம் செய்துள்ளது.

பிரதமர் மோடியின் மேற்கூரை சோலார் திட்டத்தில் வீட்டில் இருந்தபடியே சேரலாம்- அஞ்சல் துறை அறிமுகம்!

KarthigaBy : Karthiga

  |  6 March 2024 11:32 AM GMT

பிரதமர் நரேந்திர மோடி 'பி.எம்.சூர்யா கர் முஃப்ட் பில்லி யோஜனா' என்ற மேற்கூரை சோலார் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு மேற்கூரை சோலார் பேனர்களை நிறுவவும் சூரிய சக்தியை மின்சாரத்துக்கு பயன்படுத்தவும் மானியம் வழங்கப்படுகிறது. வீட்டு மேற்கூரையில் சோலார் பேனர்களை நிறுவுவதன் மூலம் வீட்டின் மின்சார செலவை குறைப்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் .


மேற்கூறிய சோலார் திட்டத்தின் மூலம் ஒரு கோடி வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும். அத்துடன் சோலார் பேனல்களின் விலையில் 40% வரை மானியம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் சேர விரும்பும் பொதுமக்கள் தபால் துறை மூலமாக வீட்டில் இருந்தபடியே பதிவு செய்து கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி சென்னை வடகோட்ட அஞ்சல் துறையின் சார்பில் தபால்காரர்கள் வீட்டுக்கே வந்து பதிவு செய்து தருவார்கள்.


மின் இணைப்பு வாடிக்கையாளரின் கடைசி ஆறு மாதத்துக்குள் கட்டப்பட்ட ஏதேனும் ஒரு மின் ரசீதின் நகல் ஆகிய ஆவணங்களை கொண்டு தங்களது பகுதி தபால்காரர் மூலம் இத்திட்டத்தில் வீட்டில் இருந்தபடியே பதிவு செய்து கொள்ளலாம் .இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய 0444-28273635 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை வடக்கோட்டம் முதல் நிலை கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்ட செய்து குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


SOURCE :Dinaseithi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News