Kathir News
Begin typing your search above and press return to search.

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தூய்மை பணியில் ஈடுபட்ட ஜே.பி.நட்டா!

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு டெல்லி கோவிலில் ஜே.பி நட்டா தூய்மை பணியில் ஈடுபட்டார்.

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தூய்மை பணியில் ஈடுபட்ட ஜே.பி.நட்டா!
X

KarthigaBy : Karthiga

  |  15 Jan 2024 2:30 PM GMT

அயோத்தி ராமர் கோவிலில் வருகிற 22 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை ஒட்டி மகர சங்கராந்தி முதல் 22-ஆம் தேதி வரை நாடு முழுவதும் கோவில்களில் தூய்மை பணியில் ஈடுபட பா.ஜனதா முடிவு செய்துள்ளது. அதன்படி பா.ஜனதா தலைவர்கள் ஆங்காங்கே கோவில்களில் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி நட்டா நேற்று டெல்லியில் கரூர் பாக்கில் உள்ள குரு ரவிதாசர் கோவிலில் தூய்மை பணியில் ஈடுபட்டார்.


பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பிரதமர் மோடி உத்தரவுபடி மகர சங்கராந்தி முதல் 22-ஆம் தேதி வரை தூய்மை பணியில் ஈடுபட நாடு முழுவதும் பல்வேறு கோவில்களிலும் புனித தலங்களிலும் பா.ஜ.க தலைவர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில்களில் பஜனை பாடும் பணியிலும் பங்கேற்போம்.


கும்பாபிஷேகம் நடக்கும் 22-ஆம் தேதி எங்கள் இல்லங்களில் ராமஜோதி ஏற்றி வைத்து கடவுள் ராமரை வழிபடுவோம். இவ்வாறு அவர் கூறினார். இதுபோல உத்திர பிரதேச மாநில தலைநகரம் லக்னாவில் உள்ள ஒரு கோவிலில் அம்மாநிலத்துணை முதல் மந்திரி பிரஜேஷ் பதக் ,தூய்மைப்படுத்தும் பணயில் ஈடுபட்டார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News