Kathir News
Begin typing your search above and press return to search.

காசி - தமிழ் சங்கமத்தை தடுத்து நிறுத்த வேண்டும் - பதறி கூச்சலிடும் கி.வீரமணி, ஏன்?

திராவிட கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில் காசி தமிழ் சங்கமத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

காசி - தமிழ் சங்கமத்தை தடுத்து நிறுத்த வேண்டும் - பதறி கூச்சலிடும் கி.வீரமணி, ஏன்?
X

KarthigaBy : Karthiga

  |  6 Nov 2022 10:00 AM GMT

காசி தமிழ்ச்சங்கமும், சென்னை ஐ.ஐ.டி.யும் இணைந்து நடத்தும் சங்கமத்தின் பின்னணியில் இருப்பது இந்துத்துவா - சனாதனப் பயிற்சியே. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மத்திய அரசின் எதேச்சதிகார தன்மையை நிறைவேற்றிக் கொள்ள தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளவர் தான் கவர்னர் ஆர்.என்.ரவி அன்றாடம் அவருடைய பேச்சுக்களும் நடவடிக்கைகளும் அவரது இந்த போக்கை தெளிவாக காட்டுகின்றன. பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும் சென்னை ஐ.ஐ.டி. யும் இணைந்து இந்த காசி தமிழ் சங்கமத்தை நடத்துகிறார்கள்.

நவீன மருத்துவத்தை யோகாவையும் ஆயுர்வேதத்தையும் கொண்டு மேம்படுத்துவார்களாம். 'தேசபக்தி' என்ற சொல்லின் மீது மதவெறியை ஏற்றுவதும், பழைய பண்பாடு, பாரம்பரியம் என்ற பெயரில் ஒற்றை மதச் சாயத்தை ஊற்றுவதும் தான் வெகு மக்களை ஏமாற்றி தன் வலையில் விழவைக்க ஆர் .எஸ். எஸ் கடைபிடிக்கும் தந்திரங்கள் .தமிழ்நாடு அரசை தவிர்த்து விட்டு, தமிழ்நாட்டின் பண்பாட்டை பேசப் போகிறோம் என்றால் அதன் உள்நோக்கம் என்ன? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News