கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம், குழு அமைத்து களத்தில் இறங்கும் பா.ஜ.க - அண்ணாமலை அதிரடி அறிவிப்பு
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் பா.ஜ.க தலைமையிலான விசாரணை குழு இரண்டு நாட்களில் அமைக்கப்படும் என சேலத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
By : Mohan Raj
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் பா.ஜ.க தலைமையிலான விசாரணை குழு இரண்டு நாட்களில் அமைக்கப்படும் என சேலத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சேலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு பா.ஜ.க'வின் மாநில தலைவர் அண்ணாமலை ஆடிட்டர் ரமேஷ் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, 'கள்ளக்குறிச்சி மனைவி உயிரிழப்பு தொடர்பாக தமிழக அரசு கையாண்ட விதம் என்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது சம்பவம் நடந்ததிலிருந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் பல்வேறு சேதங்கள் ஏற்பட்ட பிறகு பார்வையிட சென்றது ஏற்றுக்கொள்ள முடியாதது.
மேலும் இதுபோன்ற அசம்பாவிதம் நடப்பதற்கு முன்னதாக உளவுத்துறை என்ன செய்து வந்தது முறையான தகவல் தான் தெரிவிக்காமல் கூட்டத்தை கட்டுப்படுத்த போதுமான காவலர்கள் இல்லாமல் போலீசார் பெரும் சிரமத்துக்கு தள்ளப்பட்டனர்.
இது தொடர்பாக தமிழக டி.ஜி.பி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று திடீரென மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பவரை மாற்றி நடவடிக்கை எடுத்து விட்டதாக கண்துடைப்பு வேலைகளை தி.மு.க அரசு செய்து வருகிறது.
மேலும் கடந்தாண்டில் தஞ்சை மாவட்டத்தில் நடந்த சிறுமியின் மரணத்திற்கு தமிழ்நாடு பா.ஜ.க'வின் மூலம் அமைக்கப்பட்ட தனிக்குழு போன்று இந்த வழக்கை பா.ஜ.க இரண்டு நாட்களில் கையில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளது' என்றார் அண்ணாமலை.