அமெரிக்காவின் தற்காலிக அதிபரான கமலா ஹாரிஸ் - ஜோ பைடன் உத்தரவு!
அமெரிக்க அதிபராக உள்ள ஜோ பைடன், அந்நாட்டின் துணை அதிபரான கமலா ஹாரிஸ்க்கு தற்காலிமான முறையில் தன்னுடைய அதிபர் அதிகாரத்தை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ள சுவாரஷ்யம் நடைபெற்றுள்ளது.
By : Thangavelu
அமெரிக்க அதிபராக உள்ள ஜோ பைடன், அந்நாட்டின் துணை அதிபரான கமலா ஹாரிஸ்க்கு தற்காலிமான முறையில் தன்னுடைய அதிபர் அதிகாரத்தை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ள சுவாரஷ்யம் நடைபெற்றுள்ளது.
அதிபர் ஜோ பைடன் வாஷிங்டனில் உள்ள மருத்துவமனையில் திடீரென்று உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை மேற்கொண்டதில் பெருங்குடலில் பிரச்சனை இருப்பது தெரியவந்தது. இதனால் அவருக்கு மயக்கவியல் முறையில் சிகிச்சையை மருத்துவர்கள் அளித்தனர். இதனிடையே தான் குணமாகும் வரை தன்னுடைய அதிபருக்கான அனைத்து வகையிலான அதிகாரத்தையும் துணை அதிபரான கமலா ஹாரிஸ்க்கு மாற்றி உத்தரவிட்டார்.
இதனால் சுமார் ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் தற்காலிகமான முறையில் அமெரிக்காவின் அதிபராக கமலா ஹாரிஸ் பதவி வகித்தார் என்று வெள்ளை மாளிகை தற்போது தகவலை வெளியிட்டுள்ளது.
Source, Image Courtesy: Puthiyathalamurai