Kathir News
Begin typing your search above and press return to search.

ரூ.10 கோடியை “ஆட்டையைப் போட்ட” கமலஹாசன்! உலகநாயகனின் பித்தலாட்ட பின்னணி அம்பலம்!!

ரூ.10 கோடியை “ஆட்டையைப் போட்ட” கமலஹாசன்! உலகநாயகனின் பித்தலாட்ட பின்னணி அம்பலம்!!

ரூ.10 கோடியை “ஆட்டையைப் போட்ட” கமலஹாசன்! உலகநாயகனின் பித்தலாட்ட பின்னணி அம்பலம்!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Sep 2019 6:35 AM GMT



கமலஹாசன், தமிழ் திரைப்பட உலகில் தொழில்நுட்பம் அறிந்த முதன்மையான நடிகர் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் கிடையாது. மிகத் திறமையான நடிகரும்கூட. இதிலும் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை.


ஆனால், அற்புதமான பித்தலாட்ட பேர்வழி என்பது பல பேருக்கு தெரியாது. அவர்களுக்கு இதை தெரிந்துகொள்ளும் வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது.


இவர், மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் கதாநாயகனாக நடிக்கும்போது, தனது அனைத்து வித்தைகளையும் பரிசோதனை செய்து பார்ப்பார். இது இவருக்கு வாடிக்கையான ஒன்று. இதனால் அந்த தயாரிப்பாளர்களின் திட்டமிட்ட முதலீடுகள், எக்குத்தப்பாக அதிகமானாலும் அது பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார் கமலஹாசன்.


உதாரணத்திற்கு, ஆளவந்தான் படத்தை எடுத்துக்கொள்ளலாம். அந்த படத்தின் வெளியீட்டிற்கு பிறகு அதன் தயாரிப்பாளர், கலைப்புலி தாணு நடுத்தெருவிற்கே வந்துவிட்டார். அதாவது அவரை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்திவிட்டார் கமலஹாசன். இது தமிழ் திரை உலகம் அறிந்த செய்தி.


ஆனால் அதே நேரத்தில், தான் சொந்தமாக தயாரிக்கும் அனைத்து படங்களும் வெற்றி வாகை சூடிவிட வைப்பார். குறைந்த முதலீட்டில், குறித்த காலத்திற்குள் படப்பிடிப்புகளை முடிந்து, அந்த படங்களை திரைக்கு கொண்டு வந்துவிடுவார்.


இதுதான் கமலஹாசனின் சுயரூபம்.


அதோடு, தனக்கு பிரச்சினை ஏற்படுகின்றபோது, மற்றவர்களை சரியாக பயன்படுத்திக் கொள்வார். ஒன்று காலில் விழுவார் அல்லது பசப்பு வார்த்தைகள் கூறி அவர்களை ஏமாற்றுவார்.


விஸ்வரூபம் படம் வெளியானபோது, முஸ்லிம் தீவிரவாத கும்பல்கள் பிரச்சினையை விஸ்வரூபமாக்கிய போது, அவர்களிடம் மண்டியிட்டு படத்தை வெளியிட்டார். இது வரலாறு.


அதேபோல உத்தமவில்லன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டபோது, அதை லாவகமாக, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிடம் இருந்து ரூ.10 கோடி வாங்கி படத்தை வெளியிட்டார். அப்போது ஞானவேல்ராஜாவுக்கு ஒரு படம் தயாரித்து தருவதாக கமலஹாசன் வாக்குறுதி அளித்துள்ளார்.


இது நடந்தது 2015-ஆம் ஆண்டு. அதன் பிறகு இன்றுவரை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு படம் தயாரித்தும் கொடுக்கவில்லை. அவரது தயாரிப்பில் எந்த படத்திலும் நடித்தும் கொடுக்கவில்லை. 10 கோடி ரூபாயையும் திருப்பிக் கொடுக்கவில்லை. அதற்கான வட்டியைக்கூட இதுவரை கொடுத்ததே இல்லை.


இப்படி 10 கோடி ரூபாயை ஆட்டையை போட்ட கமலஹாசன் மீது இப்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார் ஞானவேல்ராஜா.


தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இதற்காக விரைவில் பஞ்சாயத்தை கூட்ட உள்ளனர். அந்த பஞ்சாயத்தில், குற்றம் சாட்டப்பட்ட உலக நாயகன் கமலஹாசனை நிற்கவைத்து விசாரணை விரைவில் நடைபெறும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இப்படிப்பட்ட நடிகர் கமலஹாசன் முதல்வர் ஆனால், தமிழகத்தையே ஆட்டையை போட மாட்டாரா? என்று கேட்கின்றனர் திமுகவினர்!


Next Story
கதிர் தொகுப்பு
Trending News