Kathir News
Begin typing your search above and press return to search.

அப்பாவோ "எருமை" என்றார், மகனோ "பெருமை" பேசுகிறார் - கர்மவீரர் காமராஜரை பற்றிய தி.மு.க. வின் வேஷம்.! #Kamarajar #DMK #MKStalin

அப்பாவோ "எருமை" என்றார், மகனோ "பெருமை" பேசுகிறார் - கர்மவீரர் காமராஜரை பற்றிய தி.மு.க. வின் வேஷம்.! #Kamarajar #DMK #MKStalin

அப்பாவோ எருமை என்றார், மகனோ பெருமை பேசுகிறார் - கர்மவீரர் காமராஜரை பற்றிய தி.மு.க. வின் வேஷம்.! #Kamarajar #DMK #MKStalin
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 July 2020 3:56 PM IST

தி.மு.க வில் ஒர் அணி புதிதாக துவங்கப்பட்டு அதற்கு நேரடி தலைவராக ஸ்டாலினே இயங்குகிறார் என்று தெரிகிறது. ஆம், "இறந்தவர்களை தி.மு.க உறுப்பினர் ஆக்கும் அணி" என்பதுதான் அது. அதாவது தமிழகத்தின் பெருமைகளாக இருந்து யார் இறந்திருந்தாலும் சரி அவர்களுக்கு தி.மு.க சாயத்தை பூசி அவர்களும் எங்கள் ஆதரவாளரே என்று சொல்லாமல் விளம்பரம் செய்வது.

இந்த வரிசைப்படி பார்த்தால் சென்ற வாரம் மறைந்த நாவலர்.நெடுஞ்சேழியனின் புகைப்படத்தை அறிவாலயத்தில் முதன் முறையாக வைத்து பூ தூவி மரியாதை செலுத்திய நிகழ்வு. தானும் ஒருவராக இருந்து உருவாக்கிய இயக்கம் கருணாநிதி அவர்களின் ஊழலில் மூழ்கி திளைக்கிறதே என கவலை கொண்டு எம்.ஜி.யார் அவர்களின் துணை கொண்டு நாவலர்.நெடுஞ்சேழியன் ஆரமித்ததே அ.தி.மு.க எனும் கட்சி இது தமிழக அரசியல் வரலாற்றை அறிந்த அனைவருக்கும் தெரியும். இருப்பினும் நாவலருக்கு தி.மு.க சாயத்தை பூசி, தி.மு.க 'வின் கொடியை அவர்மீது போர்த்த முயற்சித்தனர் ஸ்டாலின் மற்றும் அவரது குழுவினர்.

இரண்டாவதாக இரு தினங்களுக்கு முன்பு மறைந்த திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களின் பிறந்ததினம் வந்தது. இசைப்பிரியர்கள், வாசிப்பு ஆர்வலர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் நா.முத்துகுமாரை நினைவு கூர்ந்தனர். இந்த சந்தடி சாக்கில் தி.மு.க'வின் பட்டத்து இளவரசர் உதயநிதி'யோ ஒருபடி முன்னே போய் நா.முத்துக்குமாருக்கு பிறந்தநாள் என்னு நினைவை குறிப்பிட்டு, "கழகம் மீதும், கலைஞர் மீதும் பற்று கொண்டவர் முத்து" என ஒரு பிட்டை சொருகியதுதான் பெரும் நகைச்சுவை. நா.முத்துக்குமாரே அன்று அவர் கனவில் வந்து "எனக்கு ஏங்க தி.மு.க கரைவேட்டி கட்டுனீர்கள்?" என்று கண்டிப்பாக உதயநிதியிடம் கேட்டிருப்பார். ஆகவே மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரையும் தி.மு.க'வின் கொடியை போர்த்தி கருப்பு, சிகப்பு சாயத்தை பூசியாகிவிட்டது.

இன்றோ மறைந்த தமிழக முன்னாள் முதல்வர், கர்மவீரர், கல்வியை தமிழகத்தில் பட்டிதொட்டியில் பரப்ப முதல் முயற்சி மேற்கொண்ட கல்விகண் திறந்த காமராஜரின் பிறந்தநாள். இதனை குறிப்பிட்டு தி.மு.க'வின் தலைவர் ஸ்டாலின் கூறிய விஷயம்தான் ஹைலைட்டே!

"கர்மவீரர்- வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றிய சிறந்த முதல்வர்- பொதுவாழ்வில் அரிய மாமனிதர்- திராவிட இயக்கத் தலைவர்களின் அன்புக்குரிய காமராஜர் பிறந்தநாளினை கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடித்து பெருந்தலைவர் பெருமைகளை இன்றைய தலைமுறை அறியப் பேசுவோம்; ஏற்றிப் போற்றுவோம்!"

என்று தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது மறைந்த தி.மு.க தலைவரும், ஸ்டாலினின் தகப்பனாருமாகிய மு.கருணாநிதி அவர்கள் கர்மவீரர் காமராஜரை பற்றி கூறிய வார்த்தைகளும், பாடிய வசவுகளும் தமிழக அரசியல் வரலாறு அறியும்.

#திருச்சியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில், தற்போது வயதான காலத்தில் காமராஜர் பதவியை விரும்புவது ஏன்? என்று கருணாநிதி அவரின் வயதை கேலி செய்து பேசினார்.

# அண்டங் காக்கா, காண்டாமிருகத் தோலர் , எருமைத் தோலர் , மரமேறி , பனை ஏறி , கட்டபீடி இவையெல்லாம் கருணாநிதி காமராஜரை ஒருமையில் வசை பாடிய காவிய சொற்கள்.

# விருதுபட்டியில், கருவாட்டு வியாபாரம் செய்த, கருவாட்டுக்காரி சிவகாமியின் சீமந்த புத்திரன் தான், இந்த காமராஜன்' என்று, ஒன்பது ஆண்டு, பொற்கால ஆட்சி தந்த காமராஜரை கீழ்த்தரமாக விமர்சித்தது சாட்சாத் கருணாநிதி'யே தான்.

# "திருமணம் வேண்டாம்' என்று, மக்கள் தலைவராக திகழ்ந்தார், காமராஜர். அதற்கு, "காமராஜருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை' என, "நாகரிகத்தோடு' நக்கல் செய்தவர் ஸ்டாலின் தகப்பனார் கருணாநிதி.

# காமராஜர் என்ன மெத்த படித்தவரா? முன்பெல்லாம் ரஷ்யாவிற்கு எருமை தோலை தான், இந்தியா ஏற்றுமதி செய்தது. இன்று, எருமையையே அனுப்பியுள்ளது' என, காமராஜர், ரஷ்யா சென்றதை பொறுத்துக் கொள்ள முடியாமல், பொறாமைப்பட்டு பேசியவர் கருணாநிதி.

இவை தவிர இன்னும் ஏராளம் அச்சில் ஏற்றினார் தனி புத்தகமே போட வேண்டும். இன்றைக்கு கருணாநிதி'யின் மகன் ஸ்டாலினோ கர்மவீரர் பெருமை பேசவேண்டும் என்கிறார். தகப்பன் காமராஜரை "எருமை" என்று விளாசினார், மகனோ அவரின் "பெருமை" பேச வேண்டும் என்கிறார். உங்களுடன் நகைச்சுவைதான் போங்கள் தி.மு.க தலைவரே.

ஆலோசனை கூற ரூ.380 கோடிக்கு ஆள் வைத்திருக்கும் உலகின் காஸ்ட்லி தலைவரே உங்கள் கட்சியின் வரலாற்றை கொஞ்சமாவது படியுங்க பிறகு தமிழ்நாட்டை ஆள எண்ணலாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News