காஞ்சி காமாட்சி அம்மன் பற்றிய ஆன்மீக தகவல்கள் !
Kanchi kamatchi amman also called as kanchipuram kamatchi amman.
By : G Pradeep
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோவில், அன்னை லலிதா மஹா திரிபுரசுந்தரியின் முழுமை ரூபமாக காட்சி தருகிறாள். மதுரையின் மீனாட்சி, திருவாணைக்காவலின் அகிலாண்டேஸ்வரி மற்றும் காஞ்சியின் காமாட்சி இந்த மூவரும் தேவி வழிபாட்டில் மிக முக்கியமான அம்சம். காஞ்சிபுரத்தில் அமைந்திருக்கிறது இக்கோவில். இக்கோவிலில் காமாட்சி அம்மன் இரு கால்களையும் மடித்து பத்மாசனத்தில் மிகவும் கம்பீரமாக அருள் தருகிறார்.
ஒரு கையில் கரும்பை வில்லெனவும், மற்றொரு கையில் தாமரை மற்றும் கிளியினையும் ஏந்தியுள்ளார். சக்தி பீடங்களாக கருதபடும் 51 முக்கிய ஸ்தலங்களில் அன்னையின் முதுகெலும்பு விழுந்த ஸ்தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது. காமாட்சி அம்மன் இந்த கோவிலில் "பரப்ரஹ்ம்ம ஸ்வரூபினியாக " காட்சி தருகிறார். ஆதியில் அன்னை மிகவும் உக்கிரமானவராக இருந்து உக்கிர ரூபினியாக இருந்த தாகவும். எட்டாம் நூற்றாண்டில் அன்னையை சாந்தப்படுத்த ஆதி சங்கரர் ஶ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்து அன்னையை செளம்யம் நிறைந்த காமாட்சியாக மாற்றினார் என்பத்உ வரலாறு.
இந்த கோவிலில் அயோத்தியின் அரசரான தசரத சக்ரவர்த்தி புத்திர காமேஷ்டி யாகத்தை நடத்தினார் என்ற குறிப்புகள் உண்டு. இங்குள்ள அன்னையின் முகம் மிகவும் தீர்க்கமானதாக இருப்பதால், அன்னையை கூர்ந்து தரிசிப்பவர்களுக்கு அன்னை கண் சிமிட்டுவதை போன்ற உணர்வு ஏற்படும் என்கிறார்கள். காமாட்சி கோவிலின் அருகே ஆதி காமாட்சி கோவில் அமைந்துள்ளது. மேலும் இது பலவிதமான பெயர்களில் அழைக்கப்படுகிறது. க்ரித்திமதி, தந்திரசூடாமணி இந்த ரூபத்தில் நான்கு கரங்களுடனும் அதில் அங்குசம், பாச, அபய மற்றும் கபாலத்தை ஏந்தியப்படி இருக்கிறார்.
இந்த கோவிலில் நான்கு கால பூஜை நடைப்பெறுகிறது. இங்கு நிகழும் தேர் திருவிழாவும், தெப்ப திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆடி பூரம், சங்கர ஜெயந்தி, வசந்த உற்சவம் ஆகியவை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வெள்ளிக்கிழமைகள் மிகவும் பிரசித்தி பெற்றது. நான்கு திசைகளிலும் ம்டங்களை நிறுவிய பின் ஆதி சங்கரர் காஞ்சி வந்தார். இங்கே காமகோடி பீடத்தை நிறுவி காமாட்சியுடன் ஐக்கியமானார். இந்த கோவிலில் அன்னையின் ஆலயத்தின் முன்பாக ஶ்ரீ சக்ரத்தை நிறுவியவர் ஆதி சங்கரர் எனவே இங்கு நிகழும் எந்தவொரு விழாவிலும் அவருக்கே முதன்மையான இடம் அளிக்கப்படுகிறது.
Image Courtesy : Wallsnap, Pinterest