கர்மா என்பது என்ன ? ஆன்மீக ரீதியில் ஓர் ஆழமான பார்வை
கர்மா என்பது என்ன ? ஆன்மீக ரீதியில் ஓர் ஆழமான பார்வை
By : Kathir Webdesk
கர்மா என்பது நாம் செய்கின்ற செயல் அன்றி வேறெதுவும் அல்ல. நாம் செய்யக்கூடிய செயல்கள் ஒரு மனிதனுடைய ஆன்மாவில் பதிவை ஏற்படுத்த தவறுவதில்லை.
இதை ஒரு வாழ்வியல் உதாரணத்தின் மூலம் நம்மால் உணரமுடியும். உதாரணமாக, அரிசி வியாபாரம் செய்கின்ற ஒரு மனிதன் விலை உயர்ந்த அரிசியையும் தரமற்ற குறைந்த விலையையுடைய அரிசியையும் கலந்து அதை தரமுள்ள அரிசியின் விலைக்கு விற்றுவிடுகிறான் என வைத்து கொள்வோம்.
இங்கு அவனுக்கு இரண்டு விதமான கர்மங்கள் இதன் மூலம் வந்து சேர்கின்றன. ஒன்று செயலின் நேரடி விளைவு, இரண்டு செயலின் தன்மை ஏற்படுத்தும் விளைவு.
முதலாவது செயலின் நேரடி விளைவான லாபம் அவனுக்கு வந்து சேர்கிறது. இரண்டாவது விளைவின் தன்ன்மை, அதாவது தவறான வழியில் அந்த லாபத்தை ஈட்டியதால் அந்த லாபாம அவனுக்கு எந்த விதத்திலும் உதவி செய்யாமல் போய்விடும். அப்படியே செய்தாலும் அந்த தொகை வேறு ஒரு சூழ்நிலையில் நஷ்டமாக போய்விடும். இரண்டாவதாக அப்பாவியான ஒருவரை ஏமாற்றியதன் விளைவாக அந்த செயலின் பதிவு ஆன்மாவில் பதிந்து அடுத்தடுத்து பிறவிகளில் தொடர்ந்து வரும். அது ஒரு வியாதியாகவோ அல்லது மற்ற வழிகளிலோ தொடர்ந்து வந்து அலைகழிக்கும்.
சில வியாதிகள் என்ன முயற்சி செய்தாலும் தீராமல் தொடர்ந்து கொண்டிருப்பதை பலர் கண்டிருக்கலாம். இது போன்ற உபாதைகளுக்கான காரணம் முன் வினை பயன்களாக இருக்க வாய்ப்புண்டு. இதை போன்ற வியாதிகளை குணப்படுத்த வேண்டுமானால் தீய கர்மாக்களை அழிக்கும் வழிமுறைகளை ஆன்மீக ரீதியில் செய்தாலே ஒழிய ஒருவர் மீண்டு வர இயலாது. இங்கு பிரச்சனை என்னவென்றால் எல்லோராலும் தங்களுடைய முந்தைய கர்ம வினைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ள முடிவதில்லை. அது ஒரு தகுந்த குருவின் ஆசி பெற்ற சிலராலேயே முடிகிறது.
தனிப்பட்ட செயல்களால் விளைந்த இந்த கர்ம வினையை சரி செய்தாலும் கூட “பித்ருதோஷம்” என சொல்லப்படும் மூதாதயர்களால் வரும் வினைகளை சரி செய்வது முன்னதை விட சிரமமானதாக கருதப்படுகிறது . பித்ருக்களின் சாபத்தால் பாதிக்கப்ட்டவர்கள் மிகுந்த சிரமப்பட வேண்டிவரும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தில் “பித்ருராசி “என்று ஒரு பதத்தை பயன்படுத்துவார்கள். அதாவது குறிப்பிட்ட ஒரு முதாதையருடைய தாக்கம் கொண்ட ஆன்மா பூமியில் பிறக்கும் போது அவரை போன்ற குணத்துடனேயே பிறக்குமாம், அதே நடை, உடை ஏன் மூதாதையரை போன்ற சில தன்மைகளை கூட அது பெற்றிருக்குமாம்.
இதை போன்ற பிரச்சனைகளை சில பரிகாரங்களால் மட்டும் தீர்த்துவிட முடியாது. நிறை ஞானியான குருவால் மட்டுமே அது முடியும்
இஷ்வாகு வம்சத்தில் பிறந்த ஶ்ரீராமனின் மூதாதைமாரான திலீபன் நீண்ட நாட்களாக குழந்தையில்லாமல் இருந்தான் இதற்கான தீர்வை கேட்க வசிஷ்டரிடம் சென்றபோது அவர் தன்னுடைய ஞான திருஷ்டியினால் குழந்தை பேறு இல்லாமல் போன காரணத்தை கண்டுபிடித்தார். ஒரு முறை திலீபன் தன்னுடைய டதேர் சக்கரத்தால் ஒரு தேவலோக பசுவை காயப்படுத்திவிட்டான். இதுவே அவனுக்கு குழந்தை இல்லாமல் போனதற்கு காரணமாய் அமைந்திருந்தது. வசிஷ்டர் திலீபனையும் அவன் மனைவி சில காலம் ஆசிரமத்தில் தங்கி அங்கிருக்கும் பசுக்களை பராமரித்து கொண்டு வருமாறு அறிவுருத்தினார். அதன்படியே அவர்கள் செய்துவந்ததால் சிறிது காலத்திலேயே அவர்களுக்கு குழந்தை பிறந்தது.
இதை போலவே மூன்றாவதாக சொல்லப்படும் கர்மா “அர்த்தன தோஷம்” . இது சிலறுடைய தவறான ஆன்மீக வழிமுறைகளால் உண்டாவது. யாருக்கும் தீங்கு விளைவிக்காத ஆன்மீக வழியில் ஒருவர் பயணிக்கும் போது அவரின் மூதாதையரின் ஆன்மா உயர்ந்த யோகங்களை அடைந்து அவரைன ஆசிர்வதித்து காக்குமாம். தவறான ஆன்மீக மார்க்கத்தில் செல்லும் போது அந்த ஆன்மாக்கள் முக்தியை அடைய இயலாமல் சம்பத்தப்பட்டவர்களை சபிக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதுவே அவர்களுக்கு இடராகவும், உபாதையாகவும் துன்பமாகவும் மாறிவிடுமாம்.
மனித இனத்திற்கு இந்த மூன்று வழிகளின் மூலமாகவே துன்பங்கள் பெரும்பாலும் வருகின்றன என ஆன்மீக மார்கத்தில் பேசப்படுகிறது. இந்த மூன்று கர்மாக்களையும் ஆன்மீக ரீதியில் தேடுதல் கொண்டு ஆன்மாவை பலப்படுத்தும் உயிர்களாலேயே எளிதாக கடந்து வர முடியும் என்பதே நம் ஞானிகள், குருமார்கள் இன்றைய மக்களிடம் எடுத்தியம்பும் உண்மை.