ஒலி மாசுபாட்டின் காரணமாக கோவில் மணிகள் ஒலிப்பதில் கட்டுப்பாடு!
By : Bharathi Latha
கர்நாடகாவில் சமீபத்தில் விடப்பட்ட சுற்றறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அதில் கோவில் மணி ஒலியின் கட்டுப்பாட்டு அளவை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் பா.ஜ.க MLAக்கள் கேள்வி எழுப்பி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கோயில்களிலும், வீடுகளிலும் பூஜையின்போது மணி, சங்கு முழங்குவது வழக்கம் என்று வாதிடுகிறார்கள். சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986ன் கீழ் ஒலி மாசு விதிகளை மீறியதாக கர்நாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலின் பேரில் போலீஸார் கோயில்களுக்கு நோட்டீஸ் அனுப்பத் தொடங்கினர்.
கோவில்களில் மணி ஓசையை கட்டுப்படுத்துவது தொடர்பாக முஸ்ராய் மற்றும் அறநிலையத்துறை பிறப்பித்த சுற்றறிக்கையை திரும்பப் பெற்றுள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா சட்டப்பேரவையில் தெரிவித்தார். கோவில்களில் மணியினால் ஏற்படும் சத்தத்தை ஒழுங்கு படுத்துவது குறித்து காவல் துறை எந்த சுற்றறிக்கையையும் வெளியிடவில்லை என்றார். முசராய் துறை பிறப்பித்த சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டது. முன்னதாக "யாருடைய புகாரின் அடிப்படையில் போலீசார் கோவில்களுக்கு நோட்டீஸ் அனுப்புகிறார்கள்? மணியோசையும் சங்கு சத்தமும் வராமல் இருக்க யார் சதி செய்கிறார்கள்" என்று அரசிடம் கேள்வி எழுப்பினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-ன் கீழ் ஒலி மாசு விதிகளை மீறியதாக கர்நாடக மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலின் பேரில் கோயில்களுக்கு போலீஸார் நோட்டீஸ் அனுப்பத் தொடங்கினர். பெங்களூருவில் உள்ள பசவனகுடியில் உள்ள தொட்ட கணபதி மற்றும் பிற கோயில்களின் பூசாரிக்கு நோட்டீஸ் வந்ததாகக் கூறப்படுகிறது. பசவனகுடி போலீசார். அந்த நோட்டீசில், அர்ச்சகர்கள் நிர்ணயிக்கப்பட்ட டெசிபல் வரம்பை மீறக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
Input & Image courtesy: The Hindu