இந்துக் கோவில்கள் சட்டங்களில் இருந்து விடுவிக்கப்படும்: கர்நாடக அரசின் முடிவு என்ன?
இந்துக் கோயில்கள் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை இருந்து விலக்க கர்நாடக அரசு முடிவு எடுத்துள்ளது.
By : Bharathi Latha
தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் விதிகளில் இருந்து இந்து கோவில்களை விடுவிக்க தனது அரசு சட்டம் கொண்டு வரும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை புதன்கிழமை தெரிவித்தார். மாநில BJP நிர்வாகிகளிடம் இதுபற்றி அவர் பேசுகையில், "பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன், எங்கள் அரசு இதற்கான சட்டம் கொண்டு வரும். சட்டங்கள் மற்றும் நிபந்தனைகளில் இருந்து, கோவில்களை விடுவிப்போம்" என்றார். ஏற்கனவே கர்நாடகத்தில் 'மதமாற்றத் தடைச் சட்டம்' முழுமையான சட்டமாக மாறியதும், அதைச் செயல்படுத்த சிறப்புப் பணிக்குழுவை அரசு அமைக்கும் என்றும் முதலமைச்சர் கூறினார்.
வரும் நாட்களில் மதமாற்ற எதிர்ப்பு மசோதா சட்டமாக மாறுவதை உறுதி செய்வதன் மூலம், அதை செயல்படுத்த சிறப்பு பணிக்குழுவையும் அமைப்பேன் என்றும் அவர் மேலும் கூறினார். "மதமாற்ற எதிர்ப்பு மசோதா" என்றும் அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய "மத சுதந்திரத்திற்கான கர்நாடகா பாதுகாப்பு மசோதா, 2021", சமீபத்திய சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர், இது அரசாங்கத்தின் மற்றொரு முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகும் மசோதா சட்டமாக இன்னும் வராததால் இந்தச் சட்டம் நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
"மத சுதந்திரத்திற்கான உரிமையைப் பாதுகாக்கும் மதமாற்ற எதிர்ப்புச் சட்டம் சூரியனும் சந்திரனும் இருக்கும் வரை இருக்கும்" என்று அவர் மேலும் கூறினார். அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவுக்குப் பிறகு, இந்த வளர்ச்சிப் பணிகளையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பார். மேலும் அயோத்தி ராமர் கோயிலை புனித தலமாக மாற்றுவோம் என்று அவர் மேலும் கூறினார்.
Input & Image courtesy: India Today