Kathir News
Begin typing your search above and press return to search.

திருச்செந்தூர்: அயோத்தியில் 1990-ஆம் ஆண்டு கரசேவை செய்த சரவண பவன், இன்று கௌரவிப்பு! #ஜெய்ஶ்ரீராம்

திருச்செந்தூர்: அயோத்தியில் 1990-ஆம் ஆண்டு கரசேவை செய்த சரவண பவன், இன்று கௌரவிப்பு! #ஜெய்ஶ்ரீராம்

திருச்செந்தூர்: அயோத்தியில் 1990-ஆம் ஆண்டு கரசேவை செய்த சரவண பவன், இன்று கௌரவிப்பு! #ஜெய்ஶ்ரீராம்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Aug 2020 10:55 AM GMT

500 ஆண்டு காலமாக போராடிக் காத்திருந்த பல தலைமுறை இந்துக்களின் கனவு இன்று நனவாக துவங்கியது. அயோத்தியில், ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல்லை நட்டு, கோவிலின் கட்டுமானப் பணிகளை நமது பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார்.

இன்னொரு தீபாவளி போல் நாடே வெற்றிக்களிப்பில் இருக்கும் இந்த நன்னாளில் இந்த நாளுக்காக தங்கள் நேரத்தையும், வாழ்க்கையையும் சில சமயங்களில் தங்கள் உயிரையும் கூட தியாகம் செய்த கரசேவகர்களையும், அரசியல் தலைவர்களையும் துறவிகளையும் பலரும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

பலர் தேசிய அளவில் புகழ் பெற்றனர். பலர் மாநில அளவில், பலர் உள்ளூர் அளவிலும் கூட. அனைவரின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது. நாம் முடிந்த வரை அனைத்துப் பங்களிப்பையும் நினைவுகூர்வது நம் கடமையாகும். ராம ஜென்மபூமி இயக்கம் வெகுவீரியமாக நடந்து கொண்டிருந்தபோது, தமிழ்நாட்டில் இருந்தும் பலரும் கரசேவைக்காக அயோத்திக்கு சென்றனர். இங்கிருந்து ஸ்ரீராம் என்று தமிழில் பொறிக்கப்பட்ட செங்கல்கள் வண்டி வண்டியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


அப்படி ஒரு கரசேவகர் திருச்செந்தூரை சேர்ந்த சரவணபவன். 1990ல் அயோத்திக்கு கரசேவை செய்ய சென்றார். தனது சகோதரரின் திருமணம் நடக்க இருக்கிறது என்பதை அறிந்தும், அயோத்தியில் ராம ஜென்ம பூமி இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்க புறப்பட்டு சென்றார். அங்கு கைது செய்யப்பட்டு 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று அவருக்கு மிகவும் சந்தோஷத்திற்கு உரிய நாள் ஆக இருந்திருக்கும் என்பதிலும், அவரை சுற்றியுள்ளவர்களுக்கு பெருமை மிகுந்த நாளாகவும் இருந்திருக்கும் என்பதில் நமக்கு எந்த ஐயப்பாடும் இல்லை. அவரை இன்று கௌரவப்படுத்தினர்.

இந்த வரலாற்று சிறப்பு மிகுந்த தருணத்தில், கம்பராமாயணத்தை பிரதமர் மோடி இன்று குறிப்பிட்ட வேளையில் தமிழ்நாட்டிலிருந்து இதற்காக உழைத்தவர்களை நாம் கௌரவிக்க வேண்டும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News