"அது எங்க தலைவர் இல்லைங்க போலி" - போலீசாரிடம் புகார் அளித்த தி.மு.க ஆர்.எஸ்.பாரதி #KarupparKootam #RSBharathi #DMK #MKStalin
"அது எங்க தலைவர் இல்லைங்க போலி" - போலீசாரிடம் புகார் அளித்த தி.மு.க ஆர்.எஸ்.பாரதி #KarupparKootam #RSBharathi #DMK #MKStalin

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக சட்டத்துறை செயலர் ஆர்.எஸ்.பாரதி காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாகக் காணொலி பதிவிட்டதாக எழுந்த புகாரின் பேரில், கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நிர்வாகிகளைக் கைது செய்தனர். இதனைதொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு ஒன்றைத் தொடங்கி கறுப்பர் கூட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு ஆதரவு என்றும், அவர்களுக்கு சட்டபூர்வமான ஆதரவு அளிக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டது போன்று போலியான பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
இதுகுறித்து திமுக சார்பில் நேற்று பேட்டி அளித்த ஆர்.எஸ்.பாரதி, ''கறுப்பர் கூட்டத்தின் செயலை திமுக எதிர்க்கிறது. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் ஆதரித்தது போன்ற தோற்றத்தை போலி ட்விட்டர் மூலம் உருவாக்கியுள்ளது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். காவல் ஆணையரிடம் புகார் அளிப்போம்'' எனத் தெரிவித்திருந்தார்.
அதன்படி சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலை இன்று சந்தித்த ஆர்.எஸ்.பாரதி புகாரை அளித்தார்.