Kathir News
Begin typing your search above and press return to search.

காசி தமிழ் சங்கமம் நிறைவு விழா: 'நாடு முழுவதும் மாநில கலாச்சாரங்களை இணைப்பதற்கான முன்னோட்டம்'- மத்திய மந்திரி ராஜ்குமார் ரஞ்சன் சிங்!

காசி தமிழ் சங்கமம் நாடு முழுவதும் மாநில கலாச்சாரங்களை இணைப்பதற்கான ஒரு முன்னோட்டம் என மத்திய மந்திரி கூறியுள்ளார்.

காசி தமிழ் சங்கமம் நிறைவு விழா: நாடு முழுவதும் மாநில கலாச்சாரங்களை இணைப்பதற்கான முன்னோட்டம்- மத்திய மந்திரி ராஜ்குமார் ரஞ்சன் சிங்!

KarthigaBy : Karthiga

  |  31 Dec 2023 3:45 AM GMT

உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த 17-ஆம் தேதி இரண்டாவது காசி தமிழ்சங்கம் தொடங்கியது. 14 நாட்களாக நடைபெற்று வந்த காசி தமிழ் சங்கமம் பிரிவு உபசார நிகழ்ச்சிகளுடன் நேற்று மாலை நிறைவு பெற்றது. மத்திய கல்வித்துறை இணை மந்திரிகள் சுபாஷ் சர்க்கார், ராஜ்குமார் ரஞ்சன்சிங் உத்தர பிரதேச மாநில மந்திரிகள் தயா சங்கர் மிஸ்ரா ரவீந்திர ஜேசுவால் ஆகியோர் பங்கேற்றனர் . ராம்கோ நிறுவனங்கள் தலைவர் வெங்கட்ராம ராஜா , வாரணாசி கலெக்டர் எஸ்.ராஜலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


தமிழ் மொழிக்கும் காசிக்கு இடையிலான பாரம்பரிய பண்பாட்டு பிணைப்புகளை அறிந்து கொள்ளும் வகையில் இரண்டாம் கட்ட தமிழ் சங்கமத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏழு குழுக்களாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து பொதுமக்கள் தேர்வு செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு வாரணாசியில் காசி விஸ்வநாதர் ஆலயம் விசாலாட்சி ஆலயம் மற்றும் அன்னபூரணி ஆலயம் காலபைரவர் ஆலயம் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் கங்கை ஆற்றில் புனித நீராடுவதற்கும் அவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


வாரணாசி நகருக்கு மிக அருகில் உள்ள சாரநாத் புத்த மத புனித தளத்திற்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இரண்டு நாட்கள் காசியிலேயே ஒவ்வொரு குழுவும் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் அவர்கள் பிரக்யராஜ் மற்றும் அயோத்திக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்த தமிழகத்திற்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். ஏழாவது மற்றும் இறுதி குழுவான தொழில் முனைவோர் குழுவினர் நேற்று காலை கங்கையிலேயே புனித நீராடினர். நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய கல்வித்துறை இணை மாதிரி ராஜ்குமார் ரஞ்சன் சிங் பேசும்போது 'காசி தமிழ்ச்சங்கம் இரண்டு மாநில கலாச்சாரங்களை இணைக்கும் ஒரு முயற்சி. இது நாடு முழுவதும் மாநில கலாச்சாரங்களை இணைப்பதற்கான ஒரு முன்னோட்டம் .


இந்த காசி தமிழ் சங்கத்தில் பங்கேற்க இந்த ஆண்டு 64,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. ஒரு குழுவிற்கு 200 வீதம் 1400 பேர் அழைத்துவரப்பட்டார்கள். இந்த இரண்டு வாரங்களில் புதிய அதிர்வலையை காசி நகரம் கண்டுள்ளது' என்றார். மத்திய கல்வித் துறை இணை மந்திரி சுபாஷ் சர்க்கார் பேசும்போது 'இரு மாநிலங்களில் கலாச்சாரத்தை ஒன்றிணைப்பதற்கு காரணம் வேற்றுமையில் ஒற்றுமையை நாம் எவ்வளவு உறுதியாக கடைப்பிடிக்கிறோம் என்பதை இந்த உலகிற்கு உணர்த்தும் என்பதற்காக தான்' என்றார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News