'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சிக்கு சத்குரு பாராட்டு!
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முயற்சியினால் தொடங்கப்பட்ட காசி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சிக்கு சத்குரு பாராட்டு.
By : Bharathi Latha
உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள காசி என்னும் வாரணாசியில் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் 'காசி தமிழ் சங்கமம்' என்ற ஒரு மாத கால கலாசார கொண்டாட்டம் நேற்று முன்தினம் தொடங்கி உள்ளது. பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ள இந்த கொண்டாட்டம், வடக்கே உள்ள காசிக்கும், தெற்கே உள்ள நமது தமிழ்நாட்டுக்கும் இடையேயான பழங்கால தொடர்புகளை கண்டறிந்து, அவற்றைஇன்றைய தலைமுறைக்கு கொண்டு வந்து சேர்க்கிற திட்டம் ஆகும். இதற்கான ஏற்பாடுகளை பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும், சென்னை இந்திய தொழில்நுட்ப கல்வி கழகமும் செய்துள்ளன.
இதன்படி தொடங்கிய நிகழ்ச்சி அடுத்த மாதம் 16-ம் தேதிவரை ஒரு மாத காலத்துக்கு நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்காகத் தமிழ்நாட்டிலிருந்து வாரணாசிக்கு 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் 2,600-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்கிறார்கள். இந்த நிலையில், காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியைப் பிரதமர் மோடி 19-ம் தேதி முறைப்படி தொடங்கி வைத்ததார். மறுபுறம் இந்த நிகழ்ச்சிக்கு சத்குரு ஜி தனது பாராட்டையும் தெரிவித்து இருக்கிறார்.
காசி மற்றும் தமிழகத்திற்கு இடையிலான ஆன்மீக கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு தொடர்பை அறிந்து கொள்ளும் நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சிக்கு சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "காசி தமிழ் சங்கம் இரு பழமையான நாகரீகங்களின் ஆழமான ஞானம் மற்றும் துடிப்பான பாரம்பரியத்தை கொண்டாடும் ஒரு சங்கமம். பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.