Kathir News
Begin typing your search above and press return to search.

“பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நாங்கள், விரைவில் தாய் மண்ணுக்கு திரும்புவோம்" - காஷ்மீர் பண்டிட்டுகள் மகிழ்ச்சி!!

“பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நாங்கள், விரைவில் தாய் மண்ணுக்கு திரும்புவோம்" - காஷ்மீர் பண்டிட்டுகள் மகிழ்ச்சி!!

“பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நாங்கள், விரைவில் தாய் மண்ணுக்கு திரும்புவோம் - காஷ்மீர் பண்டிட்டுகள் மகிழ்ச்சி!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Aug 2019 7:24 AM GMT



ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு சட்ட அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.


காஷ்மீரின் பூர்விக குடிகளான, பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர்கள், அங்கு, ஏராளமான எண்ணிக்கையில் வசித்து வந்தனர். காஷ்மீரில், பயங்கரவாதம் தலைதுாக்கிய பின்னர் முஸ்லிம் பயங்கரவாதிகளால் அவர்கள் அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர்.


தற்போது அவர்கள், டில்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் அகதிகளாக வசித்து வருகின்றனர்.


இந்நிலையில், நரேந்திர மோடி அரசு தற்போது எடுத்துள்ள நடவடிக்கை குறித்து, காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-


மோடி அரசின் நடவடிக்கை எங்கள் வாழ்வில் புது வெளிச்சம் பாய்ச்சி உள்ளது. ஆகட்டு 5-ஆம் தேதி, எங்கள் வாழ்வில் மிக முக்கியமான நாள். சரித்திர சாதனை படைக்கப்பட்டுள்ள நாள்.





ஷ்யமா பிரசாத் முகர்ஜி, தீன்தயாள் உபத்யாய, வாஜ்பாய் போன்ற தலைவர்களின் லட்சியம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எங்களின் கலாசாரம், அடையாளம் ஆகியவை பாதுகாக்கப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நாங்கள், விரைவில் தாய் மண்ணுக்கு திரும்புவோம்.


இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் ரத்து செய்யப்பட்டதை அறிந்த ஜம்மு பகுதி மக்கள், கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பட்டாசுகளை வெடித்தும், நடனமாடியும், மேளதாளங்களை இசைத்தும், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை வாழ்த்தி, கோஷங்களை எழுப்பினர்.


லடாக் பகுதியிலும் கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்




https://www.youtube.com/watch?v=25Z_XeUwrew


குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மாணவர்கள் மனித சங்கிலி அமைத்து, அதன் மூலம் 370 நீக்கப்பட்டதை கொண்டாடினர்.




https://twitter.com/ANI/status/1158539721456402434


இதேபோல் இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.


=====


Next Story
கதிர் தொகுப்பு
Trending News