Kathir News
Begin typing your search above and press return to search.

#KathirExclusive "ஆம், இஸ்ரோ ஏவுதளத்தை தமிழகத்தில் அமைக்க தி.மு.க அமைச்சர்கள் லஞ்சம் கேட்டார்கள்!!" உண்மையை உடைத்த மூத்த அதிகாரிகள் - வெளிச்சத்திற்கு வரும் தி.மு.க-வின் ஊழல் கோரத்தாண்டவம்!

#KathirExclusive "ஆம், இஸ்ரோ ஏவுதளத்தை தமிழகத்தில் அமைக்க தி.மு.க அமைச்சர்கள் லஞ்சம் கேட்டார்கள்!!" உண்மையை உடைத்த மூத்த அதிகாரிகள் - வெளிச்சத்திற்கு வரும் தி.மு.க-வின் ஊழல் கோரத்தாண்டவம்!

#KathirExclusive ஆம், இஸ்ரோ ஏவுதளத்தை தமிழகத்தில் அமைக்க தி.மு.க அமைச்சர்கள் லஞ்சம் கேட்டார்கள்!! உண்மையை உடைத்த மூத்த அதிகாரிகள் - வெளிச்சத்திற்கு வரும் தி.மு.க-வின் ஊழல் கோரத்தாண்டவம்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Aug 2019 12:05 PM IST


இஸ்ரோ ஏவுதளத்தை கன்னியாகுமரியில் அமைக்க விடாமல் துரத்தி அடித்த தி.மு.க அரசு – சந்தி சிரிக்கும் தி.மு.க-வின் துரோக வரலாறு – வெளியான அதிர்ச்சி உண்மைகள்! என்ற தலைப்பில் இன்று காலை கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருந்தோம்.


அப்போதைய தி.மு.க அரசு தமிழகத்திற்கு இஸ்ரோ ஏவுதளத்தை வர விடாமல் எப்படி முட்டுக்கட்டை போட்டது, எப்படி ஊழல் பணம் கேட்டது என்பதை எழுதி இருந்தோம்.


இது குறித்து விஞ்ஞானி நம்பி நாராயணன் தனது சுய சரிதையில் எழுதி இருப்பதை தொடர்ந்து இஸ்ரோ ஏவுதள தேர்வுக்குழு உறுப்பினராக இருந்த நீலகந்த சிவா என்பவர் தி.மு.க ஊழல் பணம் கேட்டது உண்மை தான் என உண்மையை போட்டு உடைத்துள்ளார்.


தமிழகத்தில் ஏவுதளம் அமைப்பது குறித்த முக்கிய சந்திப்புக்கு அப்போதைய முதல்வர் அண்ணாதுரை உடல்நிலை சரியில்லை என்பதால் வர முடியவில்லை என்றும், அதற்கு பதில் அப்போதைய தி.மு.க அமைச்சர்கள் மதியழகன் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர்(கருணாநிதி என்று நினைக்கிறேன் என்கிறார்) இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டதாகவும், ஏவுதளம் அமைப்பது குறித்து தி.மு.க அமைச்சர்கள் லஞ்சம் கேட்டதாகவும், இதை தெரிந்து கோபமுற்ற மூத்த விஞ்ஞானி விக்ரம் சாராபாய் சந்திப்பில் இருந்து கிளம்பலாம் என்று தெரிவித்ததாக தி.மு.க-வின் ஊழல் முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.





இதே போன்று எழுத்தாளர் கல்யாண ராமன் கூறுகையில் விக்ரம் சாராபாய் குழுவில் பணிபுரிந்த விஞ்ஞானிகளிடம் அந்த காலத்தில் உரையாடிய போது எவ்வாறு தி.மு.க-வின் லஞ்சம் மற்றும் ஊழல் முட்டுக்கட்டைகளால் தமிழகத்திற்கு இஸ்ரோ ஏவுதளம் வராமல் போனது என்பதை தெரிவித்தனர் என்பதை பதிவிடுகிறார். அதே காலக்கட்டத்தில் ஆந்திர மாநிலத்தின் தலைமை செயலாளர் டாக்டர் அபித் ஹீசேன் இஸ்ரோ ஏவுதளத்தை தங்கள் மாநிலத்திற்கு கொண்டு வர பெரு முயற்சிகள் எடுத்து எந்த லஞ்ச கோரிக்கைகளையும் வைக்காமல் மாநிலத்தின் நலனை மட்டுமே பிரதானமாக கருதினர் என்பதை பதிவிட்டுள்ளார்.




https://twitter.com/kalyanasc/status/1161513964410417152?s=20




https://twitter.com/kalyanasc/status/1161515418810486785


ஆக, தமிழகத்தின் நலனை என்றுமே கருத்தில் கொள்ளாமல் ஊழல் ஊழல் என்பதை மட்டுமே பிராதனமாக கொண்டு அரசியல் செய்து வருகிறது என்பது தெளிவாகிறது.


இஸ்ரோ ஏவுதளம் தமிழகத்திற்கு வராததால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள், பரிபோன வேலைவாய்ப்புகள் என தமிழகத்தின் சாபக்கேடாக திகழ்ந்து வந்துள்ளது தி.மு.க.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News