பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் ஆப்கானிஸ்தான் மக்கள்: ஐ.நா செயலாளர் வேண்டுகோள் !
ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்று பொதுச்செயலாளர் தற்பொழுது ஒரு வேண்டுகோள் உலக நாடுகளுக்கு முன்வைத்துள்ளார்.
By : Bharathi Latha
உலக நாடுகளில் தற்போது பரபரப்பாக பேசப்படும் விஷயங்களில் ஒன்றாக ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பற்றிய செய்திதான். ஏனென்றால் தலிபான்கள் தங்களுடைய ஆதிக்கத்தில் கீழ் ஆப்கானிஸ்தான் மக்களை ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியா குட்ரெஸ் அதற்கு உலக நாடுகளுக்கும் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.
இதுகுறித்து அவசர UNSC கூட்டத்தில் பேசிய அவர் கூறுகையில், "ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்களை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆப்கான் மக்கள் நாடு கடத்தப்படுவதை தவிர்க்க வேண்டும். பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தான் மாறாமலிருக்க சர்வதேச சமூகத்தின் நடவடிக்கை தேவை. ஆப்கானில் உள்ள பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான மனித உரிமை மீறல் கவலை அளிக்கிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உயிர்களைப் பாதுகாப்பதற்கும் மனிதாபிமான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அனைத்துக் கட்சிகளும் குறிப்பாக தலிபான்கள் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். ஆப்கானிஸ்தான் மக்கள் பெருமைக்குரியவர்கள். அவர்கள் தலைமுறை தலைமுறையாக போர் மற்றும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இனி வரும் நாட்கள் முக்கியமானதாக இருக்கும். உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் மக்களை நம்மால் கைவிட முடியாது" என்று அவர் கூறியுள்ளார்.
Image courtesy:Hindustantimes news