கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க உதவும் ஆயுர்வேத மூலிகை !
Katukarohini benefits
By : Bharathi Latha
ஆயுர்வேத மருத்துவத்தில், கடுகுரோகினி என்பது மிகவும் முக்கியமான ஒரு மூலிகை ஆகும். இந்த மூலிகை ஹெபடோடாக்சின்கள் எனப்படும் ஒரு வகையான நச்சுக்களிலிருந்து நம் கல்லீரலைப் பாதுகாக்கப் பயன்படுகிறது. இது நச்சு நீக்க, ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. கடுகுரோகினி அனைத்து வகையான பித்த-ரத்த நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. குளிர்ச்சிப்படுத்தும் ஆற்றலால், கடுகுரோகினி எரிச்சல் உணர்வை போக்க உதவுகிறது.
குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், பசியற்ற தன்மை, செரிமான கோளாறு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை இந்த கடுகுரோகினி குணப்படுத்த வல்லது. மலமிளக்கும் பண்புகளைக் கொண்டது. கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தக்கூடியது. இரப்பைக் குடல் சார்ந்த பிரச்சினைகளை குணப்படுத்த ஏற்றது. மஞ்சள் காமாலை போன்ற கல்லீரல் நோய்களுக்கு மிகச்சிறந்த தீர்வைத் தரக்கூடியது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அமிலத்தன்மை, இரப்பை குடல் சார்ந்த பிரச்சினைகள், இதய எரிச்சல் உணர்வு போன்றவை எல்லாம் நீங்கும்.
அதிவிடயம், சந்தனம், கடுகுரோகினி அனைத்தையும் சம அளவில் எடுத்து பேஸ்ட்டாக அரைத்து தோல் நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தொடர்ந்து தடவிவர நல்ல பலன் கிடைக்கும். இது சிறந்த குஷ்ட ரோக நிவாரணி என்றும் அழைக்கப்படுகிறது. கடுகுரோகினி ஒரு சிறந்த கல்லீரல் பாதுகாப்பு மருந்தாக அறியப்படுகிறது. கடுகுரோகினி மற்றும் சிரத்தை ஆகியவற்றை சம அளவு எடுத்து கஷாயம் செய்து ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்துவர நல்ல பலன் கிடைக்கும். உடலில் இரத்த அளவு குறையும் பிரச்சினையைப் போக்கவும், இரத்த சோகை பிரச்சினை இல்லாமல் புத்துணர்ச்சியாக இருக்கவும் கடுகுரோகினி மூலிகை வேர் கஷாயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Image courtesy: wikipedia