Kathir News
Begin typing your search above and press return to search.

கேரளா : தன் பள்ளிகளில் அரபு மொழி ஆசிரியர்களை நியமித்த திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் - அதிர்ச்சித் தகவல்.! #Kerala #Arabic

கேரளா : தன் பள்ளிகளில் அரபு மொழி ஆசிரியர்களை நியமித்த திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் - அதிர்ச்சித் தகவல்.! #Kerala #Arabic

கேரளா : தன் பள்ளிகளில் அரபு மொழி ஆசிரியர்களை நியமித்த திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் - அதிர்ச்சித் தகவல்.! #Kerala #Arabic

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 July 2020 4:59 AM GMT

தெற்கு கேரளாவில் கோயில்களை நிர்வகிக்கும் பொறுப்பில் இருப்பது திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம். கேரளாவின் தெற்கு மாவட்டங்களில் இதன் கீழ் பல பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் உள்ளன. கேரளாவில் அதன் நிர்வாகத்தின் கீழ் வரும் பள்ளிகளில் அரபு ஆசிரியர்களை நியமிக்க முடிவெடுத்து, தயாராக உள்ள வாரியம், இதற்காக ஏற்கனவே ஒரு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலின்படி, தேவஸ்வம் வாரியம் தனது பல்வேறு பள்ளிகளில் அரபு கற்பிக்க நான்கு பேரைத் தேர்வு செய்துள்ளது. ஷமீரா, புஷாரா பீகம், முபாஷ் மற்றும் சுமையா முஹம்மது ஆகியோர் அந்த தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள நான்கு பெயர்கள் ஆவர.

கணிதம், இசை, சமூக அறிவியல், இந்தி போன்ற பாடங்களுக்கான ஆசிரியர் காலியிடங்களையும் இந்த வாரியம் நிரப்புகிறது. இருப்பினும், வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலின் படி, எந்த சமஸ்கிருத ஆசிரியர்களும் சேர்க்கப்படவில்லை . மொத்தம் 51 வேட்பாளர்களின் தரவரிசை பட்டியலை வாரியம் வெளியிட்டுள்ளது.

திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம், 1950 ஆம் ஆண்டின் திருவிதாங்கூர்-கொச்சின் இந்து மத நிறுவனங்கள் சட்டம் XV இன் கீழ் அமைக்கப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பு என்று கூறப்படுகிறது. திருவிதாங்கூர் மற்றும் கொச்சின் மாநிலங்களை ஒருங்கிணைப்பதற்கு முன்னர், திருவிதாங்கூர் அரசரால் 1949 வரை ஆட்சி செய்யப்பட்ட பகுதியில் உள்ள 1248 கோயில்களை நிர்வகிக்கும் பணி இந்த வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

கேரள கோயில்களில் உள்ள ஐந்து தேவஸ்வோம் போர்டுகளில் தன் இரும்புப் பிடியைக் கொண்டுள்ள கம்யூனிஸ்ட் ஆட்சி, கேரளாவில் உள்ள இந்துக்களுக்கு பொருளாதார நன்மைகளைத் தொடர்ந்து மறுத்து வருகிறது.

கேரள சட்டமன்றம் கடந்த ஆண்டு, சர்ச்சைக்குரிய 'கேரள மதராசாஆசிரியர் நல நிதியம் மசோதா 2019' ஒன்றை நிறைவேற்றியது. அதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள மதரசா ஆசிரியர்களுக்கு ரூ .1500-7500 வரை ஓய்வூதியம் உறுதி செய்யப்படும். இந்த மசோதா நவம்பர் 18 ம் தேதி கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. வக்ஃப் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஜலீல் இந்த மசோதாவை முன்வைத்து, மதரசா ஆசிரியர்களின் வேலை நிலைமைகளை மேம்படுத்துவதும் அவர்களின் குடும்பங்களை ஆதரிப்பதும் இதன் நோக்கம் என்றார்.

கோயில் நிதியை பயன்படுத்தி நடத்தப்படும் பள்ளிகளில், அரபு ஆசிரியர் தேர்ந்தெடுப்பது என்ன நியாயம் என்பது மக்கள் எழுப்பும் கேள்வியாக உள்ளது.

Source:https://www.organiser.org/Encyc/2020/7/23/Devaswom-Board-to-appoint-Arabic-teachers-.html

Next Story
கதிர் தொகுப்பு
Trending News