கேரளா : கம்யூனிஸ்ட்டுகளால் தாக்கப்பட்டதால் கருக்கலைத்த தாய் தற்போது பா.ஜ.க வேட்பாளர்..!
கேரளா : கம்யூனிஸ்ட்டுகளால் தாக்கப்பட்டதால் கருக்கலைத்த தாய் தற்போது பா.ஜ.க வேட்பாளர்..!

By : Pranesh Rangan
2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில், 4 மாத கர்பிணி பெண்ணை கம்யூனிஸ்ட் கட்சியினர் எட்டி உதைத்து கடுமையாக தாக்கியதை அடுத்து, அந்த பெண் கருக்கலைக்க நேர்ந்தது.
நான்கரை மாத கர்ப்பிணியாக இருந்த ஜ்யோத்சனா என்ற பெண்ணை, CPI (M) கட்சியை சேர்ந்த தம்பி என்பவர், வயிற்றில் எட்டி உதைத்ததைத் தொடர்ந்து அவர் கட்டாய கருக்கலைப்பு செய்ய நேர்ந்தது.
அந்த வழக்கு தொடர்பாக அப்போது கோடெஞ்சேரி காவல்துறையினர் ஏழு பேரை கைது செய்தனர். நிலத் தகராறு காரணமாக கணவனைத் தாக்க எட்டு பேர் கொண்ட கம்யூனிஸ்ட் கும்பல் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வந்தபோது இந்த சம்பவம் நடந்தது.
கேரள உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடத்தப்படும் நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன. அடுத்த மாதம் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டிசம்பர் 8-ஆம் தேதி முதல் கட்ட தேர்தலும், டிசம்பர் 10-ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும், டிசம்பர் 14-ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித்தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 16ம் தேதி எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கேரள மாநிலம் கூரச்சண்டு என்ற பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின்(பா.ஜ.க) வேட்பாளராக ஜ்யோத்சனா களம் இறங்குகிறார். இந்த தகவலை பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் (அமைப்பு) BL சந்தோஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
She is Smt Jyotsna Jose . Kicked by a CPM Goon on stomach when she was pregnant . Lost her 4 1/2 months baby . Today she is a @BJP4Keralam candidate from Balussery Panchayath determined to end brutal , inhuman communist regime. pic.twitter.com/MAXMbIlMRc
— B L Santhosh (@blsanthosh) November 29, 2020
