Kathir News
Begin typing your search above and press return to search.

கேரள சர்ச் மோதல்: குழந்தைகளின் விரலைக்கீறி இரத்தத்தால் 'சத்தியம்' என்று எழுத வைத்த தேவாலயம் - பிஞ்சு உயிர்களை கொண்டு அரங்கேற்றிய விபரீதம்.!

கேரள சர்ச் மோதல்: குழந்தைகளின் விரலைக்கீறி இரத்தத்தால் 'சத்தியம்' என்று எழுத வைத்த தேவாலயம் - பிஞ்சு உயிர்களை கொண்டு அரங்கேற்றிய விபரீதம்.!

கேரள சர்ச் மோதல்: குழந்தைகளின் விரலைக்கீறி இரத்தத்தால் சத்தியம் என்று எழுத வைத்த தேவாலயம் - பிஞ்சு உயிர்களை கொண்டு அரங்கேற்றிய விபரீதம்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Nov 2019 6:53 PM IST

கேரளாவில், தேவாலயங்களுக்கு இடையேயான மோதலில் குழந்தைகளை இரத்தத்தால் சத்தியம் என எழுத வைத்த சம்பவம் குறித்து அறிக்கை அளிக்குமாறு எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியருக்கு, அம்மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

கேரளாவில் உள்ள தேவாலயங்களை ஆர்த்தோடக்ஸ் என்ற கிறிஸ்தவ பிரிவினர் நிர்வகிக்க வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்து, கிறிஸ்தவ மதத்தில் உள்ள ஜாகோபைட் என்ற பிரிவினர் கடந்த சில நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கடந்த கடந்த சில நாட்களுக்கு முன்பு கோத்தமங்கலம் என்ற ஊரில் உள்ள தேவாலயம் ஒன்றில், ஜகோபைட்ஸ் திருச்சபைகளைச் சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் தங்கள் ஆள்காட்டி விரலைக்கீறி ரத்தத்தின் மூலம் 'சத்தியம்' என வெள்ளைத்தாளில் எழுதினர். ஜகோபைட்ஸ் கிறிஸ்தவ பிரிவினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் குழந்தைகள் இவ்வாறு எழுதினார்கள் என்று தெரிய வந்துள்ளது.

இந்த செய்தி கேரள ஊடகங்களில் வெளியானதையடுத்து, அம்மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையம், நிகழ்வு குறித்து அறிக்கை அளிக்குமாறு எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட காவல் உயரதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கேரள சர்ச் மோதல்: குழந்தைகளின் விரலைக்கீறி இரத்தத்தால் 'சத்தியம்' என்று எழுத வைத்த தேவாலயம் - பிஞ்சு உயிர்களை கொண்டு அரங்கேற்றிய விபரீதம்.!

Next Story
கதிர் தொகுப்பு
Trending News