சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசு : தடுப்பதற்கு வெறும் கடிதம் எழுதிய ஸ்டாலின்- தமிழகத்தின் தாறுமாறாக உள்ள பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு எப்போது?
சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் எண்ணில் அடங்காத பிரச்சினைகள் குவிந்து கிடக்கும் போது அவற்றிற்கெல்லாம் எப்பொழுது தீர்வு சொல்லப் போகிறார்? கேள்விகளால் ஒரு அலசல்.
By : Karthiga
ஸ்டாலின் கடிதம்:
காவிரிப் படுகையில், அமராவதி (பம்பார்) துணைப்படுகையின் ஒரு பகுதியான சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக சமீபத்தில் சில ஊடகங்களில் வந்த செய்திகளின் காரணமாக, அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறையும் என்று தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இப்பணியினை நிறுத்தி வைக்க வேண்டுமென்று வலியுறுத்தி, மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு கேரள முதலமைச்சர் திரு.பினராயி விஜயன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடகாவிடம் பேசி காவிரி நீர் பெற்று தர முடியவில்லை. பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை ஸ்டாலினால் தடுக்க முடியவில்லை. காவிரியில் மேகதாது பகுதியில் அணைகட்டுவோம் என கூறும் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராக தமிழக முதல்வர் ஸ்டாலினால் பேச முடியவில்லை .இதெல்லாம் எப்பொழு முடியும் ஸ்டாலின் அவர்களே! I.N.D.I கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியை திமுக கண்டிக்காதா?வெறும் கடிதம் மட்டும் தான் எழுதுமா?
அண்ணாமலையின் தைரியம்:
கர்நாடகா சட்டமன்ற தேர்தல் சமயத்தில் கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நோக்கி நிரூபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு காவேரி தண்ணீர் விஷயத்தில் தைரியமாக தமிழ்நாட்டுக்கு ஆதரவாக பேசியவர் அண்ணாமலை.அந்த தைரியம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வருமா?கேரளா கம்யூனிஸ்ட் அரசை எதிர்த்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசுவாரா?
பாலாற்றின் அணை விவகாரம்:
பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே 22 தடுப்பணைகளை கட்டியுள்ள ஆந்திர அரசு, மேலும் ஒரு தடுப்பணை கட்டுவதற்கு ரூ. 215 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருப்பதற்கு தமிழ்நாட்டு விவசாயிகள் பெரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதிய தடுப்பணை கட்டப்படுவதைத் தடுக்க, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றம் சென்று உடனடியாக தடையாணை பெற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தியுள்ளனர்.கர்நாடகாவின் நந்தி மலையில் உற்பத்தியாகி ஆந்திரா வழியாக தமிழ்நாட்டுக்குள் நுழைகிறது பாலாறு. இந்த நதி, கர்நாடகாவில் 93 கி.மீ. தொலைவு ஆந்திராவில் 33 கி.மீ. தொலைவும் பாய்கிறது. தமிழ்நாட்டில் தான் அதிகமாக, 222 கி.மீ. தொலைவு பாலாறு பாய்கிறது. தமிழ்நாட்டின் வட மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்கள் பாலாற்றினால் பயன்பெறுகின்றன. விவசாயம், குடிநீர் ஆகியவற்றுக்கான முக்கிய ஆதாரமாக பாலாறு திகழ்கிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பாலாற்றில் சிறியதும் பெரியதுமாக 22 தடுப்பணைகளை ஆந்திர அரசு கட்டியுள்ளது. இப்போது 23-வது தடுப்பணை கட்ட ரூ. 215 கோடி ஒதுக்கி ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதிக்குட்பட்ட கணேசபுரம் என்ற பகுதியில்தான் தற்போது 22 அடி உயரத்தில் தடுப்பணை கட்ட ஆந்திர அரசு ஆர்வம் காட்டி வருகிறது.புதிய தடுப்பணை கட்டாதவாறு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
SOURCE :News