Kathir News
Begin typing your search above and press return to search.

பள்ளிகளின் தரம் குறித்த குறியீடு - அபார வளர்ச்சி காணும் மாநிலங்கள் : Niti Aayog வெளியிட்ட அறிக்கை சொல்வதென்ன..?

பள்ளிகளின் தரம் குறித்த குறியீடு - அபார வளர்ச்சி காணும் மாநிலங்கள் : Niti Aayog வெளியிட்ட அறிக்கை சொல்வதென்ன..?

பள்ளிகளின் தரம் குறித்த குறியீடு - அபார வளர்ச்சி காணும் மாநிலங்கள் : Niti Aayog வெளியிட்ட அறிக்கை சொல்வதென்ன..?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Oct 2019 6:44 PM IST


மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (Union human resource development ministry) மற்றும் உலக வங்கி ஒத்துழைப்புடன், பள்ளிகளின் தரம் குறித்த குறியீடு School Education quality Index (SEQI) என்ற தலைப்பில் மாநிலங்களின் தரவரிசை பட்டியலை Niti Aayog தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.


இந்த அறிக்கையானது 2016- 2017 ஆம் ஆண்டின் கல்வி தரவுகள் மற்றும் கற்றல், அணுகுமுறை, உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் ஆகிய பல்வேறு அடிப்படை அம்சங்கள் ஆராயப்பட்டு உருவாக்கப்பட்டது. இந்த பட்டியலில் கேரள மாநிலம் 76.6 % பெற்று முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்து ராஜஸ்தான் மாநிலம், அதற்கு அடுத்தபடியாக கர்நாடக மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழகம் 7-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த தரவரிசையில் 36.4 % பெற்று உத்தரப் பிரதேசம் பட்டியலில் கடைசியில் உள்ளது. சிறிய மாநிலங்களுக்கான தரவரிசையில் மணிப்பூர், திரிபுரா மற்றும் கோவா ஆகியவை முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளன.


யூனியன் பிரதேசங்களுக்கு தனியாக தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் 7 யூனியன் பிரதேசங்களில் சண்டிகர் பட்டியலில் முதலிடத்திலும், அதற்கு அடுத்தபடியாக தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டெல்லி, புதுச்சேரி, டாமன் மற்றும் டையூ, அந்தமான் நிகோபர் தீவு மற்றும் லட்சத்தீவுகள் இடம்பெற்றுள்ளன.


பெரிய மாநிலங்கள் பட்டியலில் 18 மாநிலங்கள் கடந்த 2015-2016 மற்றும் 2016-2017ம் ஆண்டைக்காட்டிலும் தங்களது ஒட்டுமொத்த செயல்திறனை அதிகரித்துள்ளன. இவற்றில் ஹரியானா, அசாம், உத்தரப்பிரதேசம், ஒடிசா மற்றும் குஜராத் மாநிலங்கள் அதிக அளவில் மேம்பட்டுள்ளன.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News