Kathir News
Begin typing your search above and press return to search.

எதற்கு வெளிநாடு போனார் என்று கேட்டவர்களுக்கு பதிலடி - லண்டன் கிங்ஸ் மருத்துவமனை கிளையை தமிழகத்திற்கு கொண்டு வரப்போகும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.!

எதற்கு வெளிநாடு போனார் என்று கேட்டவர்களுக்கு பதிலடி - லண்டன் கிங்ஸ் மருத்துவமனை கிளையை தமிழகத்திற்கு கொண்டு வரப்போகும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.!

எதற்கு வெளிநாடு போனார் என்று கேட்டவர்களுக்கு பதிலடி - லண்டன் கிங்ஸ் மருத்துவமனை கிளையை தமிழகத்திற்கு கொண்டு வரப்போகும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Aug 2019 12:43 PM IST


இங்கிலாந்தின் லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை கிளையை தமிழகத்தில் நிறுவ முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.


தொழில் துறையில் முன்னேறிய மாநிலமாக தமிழகத்தை உருவாக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து அதிக முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டது. தமிழகத்திற்கு அதிகளவில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று அவர் வெளிநாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.


அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு அதிகாரிகள் சாய்குமார், விஜயகுமார், செந்தில்குமார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் லண்டன் சென்றனர். இதனிடையே, இங்கிலாந்தின் லண்டனில் அமைந்துள்ள கிங்ஸ் மருத்துவமனை கிளையை தமிழகத்தில் நிறுவுவதற்கான ஒப்பந்தம் முதல் அமைச்சர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.


இந்த ஒப்பந்தம் சிறப்பு வாய்ந்தது என பாராட்டுக்கள் குவிந்து வருகிறதுஇந்த நிலையில் இந்த ஒப்பந்தம் குறித்து தனது டுவிட்டரில் கருத்து கூறிய டாக்டர் ராம்தாஸ், ‘உலகப்புகழ் பெற்ற லண்டன் கிங்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் அமைப்பதற்கான ஒப்பந்தம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் கையெழுத்தாகியிருப்பது பாராட்டத்தக்கது. முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் பயனுள்ளது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு! என்று தெரிவித்துள்ளார்.


மேலும் உலகின் தலைசிறந்த மருத்துவ சுற்றுலா மையங்களில் ஒன்றாக திகழும் தமிழ்நாட்டிற்கு கிங்ஸ் மருத்துவமனையின் கிளையும் வந்தால் மேலும் புகழ் சேர்க்கும்.லண்டனில் வழங்கப்படுவது போன்று தமிழகத்திலும் ஏழைகளுக்கு குறைந்தகட்டணத்திலும், குழந்தைகளுக்கு இலவசமாகவும் சிகிச்சை அளிக்கப்பட்டால் சிறப்பு! என்று குறிப்பிட்டுள்ளார்.




https://twitter.com/drramadoss/status/1167310843463102465

Next Story
கதிர் தொகுப்பு
Trending News