நாட்டிலேயே முதல் முறையாக ஆற்றின் கீழே ஓடும் கொல்கத்தா மெட்ரோ ரயில்! வேற லெவலுக்கு போகும் இந்திய மாநகரங்கள்!
நமது நாட்டில் சென்னை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை நடைபெறுகிறது.
By : Karthiga
பொதுவாக மெட்ரோ ரயில்கள் பூமியின் கீழே சுரங்கப்பாதை அமைத்தும் உயர் மட்டத்தில் தடம் அமைத்தும் செல்கின்றன. இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் கொல்கத்தாவில் இருந்து ஹவுராவுக்கு மெட்ரோ ரயில் இயக்குவதற்காக ஹூக்ளி ஆற்றின் கீழே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் ஒரு ஆற்றின் கீழே சுரங்கப்பாதை அமைத்த மெட்ரோ ரயில் இயங்குவது இதுவே முதல்முறை. அந்த வகையில் கொல்கத்தா மெட்ரோ ரயில் சேவை நேற்று புதிய சரித்திரம் படைத்துள்ளது.
கொல்கத்தாவின் மகாகரன் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து ஹவுரா மைதானம் மெட்ரோ ரயில் நிலையம் வரை இந்த சுரங்கப் பாதையில் நேற்று மெட்ரோ ரயில் ஓட்டம் விடப்பட்டது. அதில் மெட்ரோ ரயில்வே பொது மேலாளர் உதயகுமார் ரெட்டி அதிகாரிகள் மற்றும் இன்ஜினியர்கள் பயணம் செய்தனர். இதுபற்றி மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கருத்தை தெரிவிக்கையில் கொல்கத்தா மற்றும் அதன் புறநகர் மக்களுக்கு நவீன போக்குவரத்து சேவையை வழங்குவதில் இது ஒரு புரட்சிகரமான நடவடிக்கை என பெருமிதத்துடன் தெரிவித்தார்.