Kathir News
Begin typing your search above and press return to search.

ராமருக்கு கோவிலுக்கு பூமி பூஜை போட்டாச்சு! அடுத்தது கிருஷ்ண ஜன்ம பூமி - மீட்கத் தயாராகும் கிருஷ்ண ஜன்ம பூமி நிர்மாண் நியாஸ்.!

ராமருக்கு கோவிலுக்கு பூமி பூஜை போட்டாச்சு! அடுத்தது கிருஷ்ண ஜன்ம பூமி - மீட்கத் தயாராகும் கிருஷ்ண ஜன்ம பூமி நிர்மாண் நியாஸ்.!

ராமருக்கு கோவிலுக்கு பூமி பூஜை போட்டாச்சு! அடுத்தது கிருஷ்ண ஜன்ம பூமி - மீட்கத் தயாராகும் கிருஷ்ண ஜன்ம பூமி நிர்மாண் நியாஸ்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Aug 2020 5:30 AM GMT

உச்சநீதிமன்றம் ராம ஜன்ம பூமி இந்துக்களுக்கு தான் சொந்தம் என்று தீர்ப்பளித்து பிரபு ஸ்ரீ ராமருக்கு அங்கே கோவில் எழுப்ப பூமி பூஜையும் செய்தாகி விட்டது. அடுத்ததாக மதுராவில் இந்துக்களுக்கு சொந்தமான கிருஷ்ண ஜன்ம பூமியை மீட்க 14 மாநிலங்களைச் சேர்ந்த 80 சாதுக்களைக் கொண்ட ஸ்ரீ கிருஷ்ண ஜன்ம பூமி நிர்மாண் நியாஸ் அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அறக்கட்டளையின் தலைவர் ஆச்சாரியார் தேவமுராரி பாபு கூறுகையில், "ஹரியாலி தீஜ் அன்று (ஜூலை 23) இந்த அறக்கட்டளையை முறையாகப் பதிவு செய்தோம். இதில் பிருந்தாவனத்தைச் சேர்ந்த 11 சாதுக்கள் இதில் பங்கு கொண்டுள்ளனர்" என்று கூறினார். கிருஷ்ண ஜன்ம பூமியை விடுவிக்க பிற சாதுக்களையும் குருக்களையும் ஒன்றிணைக்க கையெழுத்து பிரச்சாரம் நடத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"கையெழுத்து இயக்கத்திற்கு பிறகு தேசிய அளவில் இந்த விஷயத்திற்கான இயக்கத்தை நிறுவ உள்ளோம். கையெழுத்து இயக்கத்தை பிப்ரவரி மாதத்திலேயே தொடங்கி விட்ட போதும் ஊரடங்கால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க இயலவில்லை" என்றும் ஆச்சாரியார் தேவமுராரி கூறியுள்ளார்.

கிருஷ்ண ஜன்ம பூமியில் முக்கியமான பிரச்சினை மதுரா கிருஷ்ணன் கோவிலுக்கு அருகில் இருக்கும் ஷாஹி இட்கா மசூதி. கிருஷ்ண ஜன்ம பூமி நியாஸ் ஏற்கனவே மசூதிக்கு அருகில் உள்ள நான்கரை ஏக்கர் நிலத்துக்கு உரிமை கோருகிறது. அங்கு 'ரங்க மன்ச்' என்ற மத மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்த உதவும் மண்டபம் அமைத்து பயன்படுத்தவும் உத்தேசித்துள்ளது.

1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதே மதுராவில் இருக்கும் கிருஷ்ண ஜன்ம பூமி மற்றும் காசியில் இருக்கும் காசி விஸ்வநாதர் கோவிலையும் மீட்க வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் கூறியது குறிப்பிடத்தக்கது. ஆனால் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் தலைமையிலான அரசு கொண்டு வந்த வழிபாட்டு தலங்கள் சட்டம், 1991 வழிபாட்டுத் தலங்கள், அதாவது சர்ச்சுகள், மசூதிகள் மற்றும் கோவில்கள் வேறு மதத்தின் வழிபாட்டு தலங்களாக மாற்றப்படுவதைத் தடை செய்கிறது.

இந்தச் சட்டத்தின் 4வது பிரிவு 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று, அதாவது இந்தியாவிற்கு அதிகாரபூர்வமாக விடுதலை கிடைத்த அன்று, இருந்ததைப் போலவே எல்லா வழிபாட்டு தலங்களும் அவற்றின் மத அடையாளம் அழியாமல் காக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. அப்படி ஒரு மத வழிபாட்டுத் தலத்தை வேறொரு மதத்திற்கு உரிய வழிபாட்டு தலமாக மாற்றுவது குறித்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தபின் நிறுத்தப்பட்டு விடும் என்றும் இந்த பிரிவு குறிப்பிடுகின்றது.

ஆனால் இதே சட்டத்தின் 5வது பிரிவு ராம ஜன்ம பூமி குறித்த உரிமைப் பிரச்சினையையும் அது தொடர்பாக நிலுவையில் இருந்த வழக்குகளுக்கும் விலக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது. ஒரு வேளை வழிபாட்டு தலங்களை மாற்றும் முயற்சியில் யாரேனும் ஈடுபட்டால் அவர்களுக்கு 3 வருடம் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று இந்தச் சட்டம் கூறுகிறது.

பல பா.ஜ.க தலைவர்களின் கடும் எதிர்ப்புக்கிடையில் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டத்தைப் பற்றி ஆச்சாரியார் தேவமுராரி கூறுகையில், "இவையெல்லாம் சிறிய தடைகளே. சமயம் வரும்போது இவற்றையும் தாண்டிச் செல்வோம். கிருஷ்ண ஜன்ம பூமியை விடுவிக்கும் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News