Kathir News
Begin typing your search above and press return to search.

கனவில் தோன்றிய கிருஷ்ணர்- நிலத்திற்கு அடியில் தோண்டிய போது உண்மையாக கிடைத்ததால் அரசு வைத்த டிவிஸ்ட்!

கனவில் பெங்களூருவை சேர்ந்த ஒருவருக்கு அடிக்கடி சாமி சிலை வந்துள்ளது. நிலத்தை தோண்டி பார்த்தபோது உண்மையிலேயே கிருஷ்ணர் சிலை கிடைத்துள்ளது. அதன் பிறகு நடந்ததை பற்றி காண்போம்.

கனவில் தோன்றிய கிருஷ்ணர்- நிலத்திற்கு அடியில் தோண்டிய போது உண்மையாக கிடைத்ததால் அரசு வைத்த டிவிஸ்ட்!

KarthigaBy : Karthiga

  |  9 Nov 2023 11:15 AM GMT

பெங்களூரை சேர்ந்தவர் லட்சுமண் (வயது 55). இவருக்கு சொந்தமான நிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி அருகே தெக்கார் கிராமத்தில் உள்ளது. இங்கு அவர் விவசாயம் செய்து வருகிறார். பழச்செடிகள், பாக்கு மரங்களை அவர் பயிரிட்டுள்ளார். அவரது கனவில் அடிக்கடி கிருஷ்ணன் சிலை ஒன்று வந்துள்ளது .


இந்நிலையில் அவருக்கு ஒரு கனவில் அவரும் அவரது நண்பரும் தெக்கார் கிராமத்தில் உள்ள தோட்டத்திற்கு செல்வது போலவும் அந்த தோட்டத்தின் கிணற்றில் அவர் நண்பர் குளித்துக் கொண்டிருக்கும் போது மூழ்குவதும் அவரைக் காப்பாற்ற தானும் குதிப்பதும் பிறகு அந்த கிணற்றிலிருந்து கிருஷ்ணர் சிலையை எடுத்து வருவது போல அந்த கனவு வந்திருக்கிறது. மறுநாள் காலையில் அவர் கனவு கண்ட அந்த இடத்திற்கு நேரில் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அங்குள்ள நிலத்தை தோண்டி பார்க்கச் சொன்னபோது உண்மையாகவே அதில் கிருஷ்ணர் சிலை கிடைத்துள்ளது .


இந்த விஷயம் அந்த ஊர் மக்களிடையே வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் லட்சுமணனின் நிலத்தை இன்னொருவரும் சொந்தம் கொண்டாடினார். இதற்கு லக்ஷ்மணன் எதிர்ப்பு தெரிவித்தார். லட்சுமணன் தான் கண்ட கனவு பற்றியும் உண்மையிலேயே அந்த கனவில் கண்டது போல தன் நிலத்தடியில் கிருஷ்ணர் சிலை இருப்பது பற்றியும் இந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பது பற்றியும் மக்களிடையே தெரிவித்துள்ளார் .


அதன் பிறகு ஒரு டிவிஸ்ட் நடந்துள்ளது. எந்த இடத்தில் கிருஷ்ணர் சிலை அவர் கண்டெடுத்தாரோ அந்த இடத்தை அரசு கைப்பற்றியது. அரசுக்கு சொந்தமாக 25 செண்டு நிலம் இருப்பதாகவும் அதை யாரோ ஒருவர் கையகப்படுத்தி இருப்பதாகவும், பிறகு அதை லக்ஷ்மணனிடம் விற்றதாகவும் தெரியவந்துள்ளது. விவசாயம் செய்ததற்கு இழப்பீடாக அரசு பணம் வழங்குவதாக கூறி அந்த நிலத்தை அரசு கைப்பற்றியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News