கிருஷ்ணகிரியில் கழிவறையில் இந்துக் கடவுள் புகைப்படங்களை எரித்த மதபோதகர் கைது !
கிருஷ்ணகிரியில் கழிவறையில் இந்துக் கடவுள் புகைப்படங்களை எரித்த மதபோதகர் கைது !
By : Kathir Webdesk
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த, எஸ்.குருபட்டியில்,கிறிஸ்தவசபை இயங்கி வருகிறது. இங்கு, மதுரை மாவட்டம், ஜெயந்திபுரத்தைச் சேர்ந்த, ஜான் பிரிட்டோ, 53, மதபோதகராக உள்ளார்.கடந்த, 2ம் தேதி, திருச்சபை வளாகத்தில் உள்ள கழிப்பறையில், ஹிந்து கடவுளின் படங்களை எரித்துள்ளார். இது தொடர்பான, 'வீடியோ' மற்றும் புகைப்படம், சமூக வலைதளங்களில் வெளியானது.இதை பார்த்த, எஸ்.குருபட்டி பகுதி, ஹிந்து முன்னணி செயலர் மாதேஷ், தேன்கனிக்கோட்டை போலீசில், நேற்று புகார் செய்தார்.
நேற்று தேன்கணிகொட்டை காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களிடம் பாரதிய ஜனதா கட்சி, இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள் சார்பாக இந்து கடவுளின் புகைப்படங்களை கழிவறையில் எரித்த தேவாலயத்தின் பாதரியார் ஜான் பிரிட்டோ மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை இடம் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது,மூன்று பிரிவுகளில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, மத போதகர் ஜான் பிரிட்டோவை நேற்று கைது செய்தனர்.