குறுங்கோளுக்கு இந்திய வானியல் ஆராய்ச்சியாளரின் பெயர் -இந்தியருக்கு கிடைத்த பெருமை!
குறுங்கோள் ஒன்றுக்கு இந்திய வானியல் ஆராய்ச்சியாளர் ஜெயந்த் மூர்த்தியின் பெயரை சூட்டி சர்வதேச வானியல் சங்கம் அவரை பெருமை படுத்தி உள்ளது.
By : Karthiga
விண்வெளி ஆராய்ச்சியில் இந்திய வானியல் இயற்பியலாளர் ஜெயந்த் மூர்த்தியின் பங்களிப்பை பாராட்டி அவரது பெயர் குறுங்கோள் ஒன்றுக்கு சூட்டப்பட்டுள்ளது .சர்வதேச வானியல் சங்கத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாக இந்திய வானியல் நிறுவனம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் விஞ்ஞானியாக 2011 ஆம் ஆண்டு வரை பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஜெயந்த் மூர்த்தி. இவரது ஆராய்ச்சிகள் புளூட்டோ உள்ளிட்ட குறுங்கோள்களை மையடுத்தி இருந்தது.
குறிப்பாக பிரபஞ்ச புறஊதா கதிர்களின் பின்னணியை அளவிடுவதில் கவனம் செலுத்தினார். சூரிய குடும்பத்தின் வெளிப்புறத்தில் நிகழக்கூடிய வானியற்பியல் மாற்றங்களை உற்று நோக்குவதாக இவரது ஆய்வுகள் அமைந்தது .நாசாவிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தற்போது கௌரவ பேராசிரியராக வானியற்பியல் பாடம் கற்பித்து வருகின்றார் .விண்வெளியில் செவ்வாய் கோளுக்கும் வியாழன் கோளுக்கும் இடையில் ஒரு சுற்றுவட்ட பாதையில் சுழன்று கொண்டிருக்கிறது ஒரு குறுங்கோள். சூரியனைச் சுற்றி வரை மூன்று ஆண்டுகள் மூன்று மாதங்கள் கால அவகாசம் எடுக்கும் இந்த குறுங்கோள் 2005 ஈஎக்ஸ் 296 என்று இதுவரை அழைக்கப்பட்டது. தற்போது இதற்கு ஜெயந்த் மூர்த்தி என்று சர்வதேச வானியல் சங்கத்தினர் பெயர் சூட்டி இந்திய வானியற்பியலாளர் ஜெயந்த் மூர்த்தியை கௌரவப்படுத்தி இருக்கிறார்கள். இது பற்றி வானியற்பியலாளர் ஜெயந்த் மூர்த்தி கூறியதாவது :-
நாசாவின் புதிய தொடுவான அறிவியல் குழுவில் விஞ்ஞானியாக பணிபுரிந்து பேரண்டத்தில் புற ஊதா கதிர்களின் பின்னணியில் நிகழும் கதிரியக்கம் குறித்து ஆராய்ச்சி செய்து வந்தேன். இதனை ஒட்டி விண்வெளி ஆராய்ச்சியில் எனது பங்களிப்பை சிறப்பிக்கும் விதமாக எனது பெயர் குறுங்கோளுக்கு சூட்டப்பட்டிருப்பது என்னை பூரிப்படையை செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
SOURCE :tamilnaduepaper.com