நடுக்கடலில் ஜப்பானுடன் இணைந்து இந்தியா கடற்படை போர் ஒத்திகை! குலைநடுங்கிபோயிருக்கும் சீனா!
நடுக்கடலில் ஜப்பானுடன் இணைந்து இந்தியா கடற்படை போர் ஒத்திகை! குலைநடுங்கிபோயிருக்கும் சீனா!

ஊரடங்கு நேரத்தில் கிழக்கு லடாக்கில் இந்தியாவும் சீனாவும் மோதிக்கொண்டுள்ள நிலையில், இந்திய மற்றும் ஜப்பானிய போர்க்கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மலாக்கா ஜலசந்தியை நோக்கிய பகுதியில் ஒரு சிறிய பயிற்சியை நடத்தியது.
இப்பகுதியில் ரோந்து செல்லும் இந்திய போர்க்கப்பல்கள், ஐ.என்.எஸ் ராணா மற்றும் கோரா-வகுப்பு ஏவுகணை, கொர்வெட் ஐ.என்.எஸ் குலிஷ், ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையின் பயிற்சிப் படையைச் சேர்ந்த ஜே.எஸ். ஷிமாயுகி மற்றும் ஜே.எஸ். காஷிமா ஆகியவை பயிற்சியில் பங்கேற்றன.
இது "பெரும்பாலும் பாஸெக்ஸ் பயிற்சி" என்றாலும், இது நிச்சயமாக சீனாவுக்கான எச்சரிக்கைக்கு சமம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
சீன ராணுவம் ஜப்பானிய கடற்படையுடன் அவ்வப்போது பிரச்னையில் ஈடுபட்டு வருகிறது. சீனா உரிமை கோரி தகராறு செய்யும் சில தீவுகளில் ஜப்பானின் உரிமையை நிலைநாட்டும் வகையில் அந்த நாட்டு அரசு சில நிர்வாக நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
இந்தப் பிராந்தியத்தில் ஜப்பான் தனது கடல் வலிமையை நிரூபிக்கும் விதமாக அவ்வப்போது போர்ப் பயிற்சி மற்றும் ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறது. அதன் விளைவாகவே தனது வல்லமையை நிரூபித்து சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கக் கடற்படையுடன் சேர்ந்து கூட்டு ராணுவ போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறது.