Kathir News
Begin typing your search above and press return to search.

பப்புவா நியூகினியாவில் நிலச்சரிவால் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்- இந்தியா உதவத் தயார் என்று அறிவிப்பு!

பப்புவா நியூகினியாவில் நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி இந்தியா உதவத் தயார் என்று அறிவிப்பு விடுத்துள்ளார்.

பப்புவா நியூகினியாவில் நிலச்சரிவால் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்- இந்தியா உதவத் தயார் என்று அறிவிப்பு!
X

KarthigaBy : Karthiga

  |  31 May 2024 2:54 AM GMT

நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பப்புவா நியூ கினியாவிற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் .ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள தீவநாடு பப்புவா நியூகினியா. அங்குள்ள எங்கா மாகாணத்தில் கடந்த வாரம் மழை வெளுத்து வாங்கியது .இதனால் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணில் புதையுண்டன. குறிப்பாக கா கோலாம் என்ற கிராமமே மண்ணில் புதையுண்டன.

அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். இதனால் அங்கு வசித்த பலரும் உயிருடன் மண்ணில் புதையுண்டனர். மேலும் பாறைகள் விழுந்து அவர்களால் வெளியேற முடியவில்லை. இதனை அடுத்து அங்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணியை துரிதப்படுத்தினர். எனினும் இந்த நிலைச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டி உள்ளதாக தேசிய பேரிடர் மீட்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும் பலர் மாயமாக இருப்பதால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

நிலச்சரிவில் சிக்கி உள்ளவர்களை மீட்க சர்வதேச நாடுகளின் உதவிகளை அந்நாட்டு அரசு நாடியுள்ளது .ஒரு மில்லியன் டாலர் மதிப்பிலான நிவாரண உதவி வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது .இந்நிலையில் பப்புவா நியூகினியாவில் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :-

பப்புவா நியூகினியாவில் நிலச்சரிவினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் வருத்தம் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் காயமடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்திக்கிறோம். சாத்தியமான அனைத்து ஆதரவையும் உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது. இவ்வாறு அவர் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.


SOURCE :Dinaboomi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News